Skip to main content

''யாருமே தப்ப முடியாது...'' அமைச்சர் மா.சு பேட்டி!

Published on 29/03/2022 | Edited on 29/03/2022

 

 '' No one can escape ... '' Minister Ma.Su interview!

 

நேற்று சென்னை ஆழ்வார் திருநகரில் வெங்கடேஷ்வரா மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்த தீட்சித் என்ற 8 வயது மாணவர் பள்ளி பேருந்து மோதி பள்ளி வளாகத்திலேயே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பள்ளியின் பேருந்து ஓட்டுநர் பேருந்தை வலதுபுறம் நகர்த்த முயன்ற போது பின்னால் நின்றுகொண்டிருந்த மாணவன் தீட்சித் மீது பேருந்தின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே அந்த மாணவன் உயிரிழந்தான்.

 

இந்த சம்பவம் தொடர்பாக பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். வெங்கடேஷ்வரா மெட்ரிக் பள்ளியின் தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, பேருந்திலிருந்து மாணவர்களை இறக்கிவிடும் ஊழியர் ஞானசக்தி ஆகிய மூன்றுபேர் மீதும் கொலையாகாத மரணத்தை விளைவித்தல் பிரிவின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்றே தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறுவனின் பெற்றோர்களைச் சமித்து ஆறுதல் கூறினார்.

 

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மா.சுப்பிரமணியன், ''மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார் திருநகரில் உள்ள வெங்கடேஸ்வரா பள்ளியில் 7 வயது சிறுவன்  தீட்சித் பள்ளி வாகனத்திலிருந்து இறக்கிவிடும்பொழுது ஓட்டுநரின் கவனக்குறைவால் வாகனத்தில் சிக்கி இறந்துள்ளார். இது மிகப்பெரிய கவனக்குறைவான விஷயம். உடனடியாக தமிழக முதல்வரின் கவனத்திற்கு சென்று தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அளவில் தமிழக அரசால் வலியுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி பேருந்தின் ஓட்டுநர், அட்டெண்டர், தாளாளர் உள்ளிட்டோர் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள். நிச்சயமாக சட்டப்பூர்வமான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும். சட்ட பூர்வ நடவடிக்கையிலிருந்து யாரும் தப்பமுடியாது. காரணம் பள்ளி பேருந்திலிருந்து மாணவர்களை ஏற்றிவிட இறக்கிவிட ஆள் இருக்க வேண்டும். அப்படியில்லாமல், ஓட்டுநர் இருக்கையிலேயே அமர்ந்துகொண்டு இருக்க குழந்தைகள் பேருந்தை விட்டு இறங்குவது, தெரியாமல் வாகனங்களை எடுப்பது கவனக்குறைவான விஷயம்தான். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்