Skip to main content

“நோ.. நெவர்.. இளையராஜா அதைச் செய்ய மாட்டார்” - திடீரென கோபமடைந்த இயக்குநர் பாரதிராஜா

 

NN

 

திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் முன் வைத்தனர். “சமீப காலமாக சினிமாக்களில் சாதி சாயத்தை பூசுவது போன்ற படங்கள் வருகிறது. அதை எப்படி பார்க்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினர்.

 

அதற்கு பதிலளித்த பாரதிராஜா, ''நான் இங்க வந்திருக்கிறது என்னோட நிகழ்ச்சி. என் சொந்த சகோதரனுடைய விருந்து நிகழ்ச்சி. இந்த நேரத்தில் நீங்கள் கேள்வி கேட்டு அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. சாதி என்பது தெரிந்தோ தெரியாமலோ சினிமாவில் வந்துவிட்டது. அது இனிமேல் அப்படி வராது'' என்றார்.

 

தொடர்ந்து, “இளையராஜா மீது சாதிய சாயத்தை பூசிக் கொண்டிருக்கிறார்களே தமிழ்நாட்டில்” என்ற செய்தியாளர் கேள்விக்கு, ''நோ... நோ... நெவர்... இளையராஜா அவருடைய ஃலைப்பில் இதை செய்ய மாட்டார்'' என்றார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !