Skip to main content

எனது வீட்டில் இருந்து பணமோ, பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை - விஜயபாஸ்கர்!

Published on 18/10/2021 | Edited on 18/10/2021

 

்ப


முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த 8 ஆண்டுகளில் அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஆதரவாளர்கள் பெயர்களில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக புகார் வந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தமிழகம் முழுவதும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்தனர். இதில் கணக்கில் வராத பணம், நகைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. 

 

இந்நிலையில் ரெய்டு நடவடிக்கைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர், " எனது வீட்டில் இருந்து பணமோ, பொருட்களோ பறிமுதல் செய்யப்படவில்லை. அரசியலில் இந்த சோதனைகள் வருவது இயற்கையான ஒன்றுதான். லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது எனக்கு ஆதரவு தெரிவித்த ஈபிஎஸ், ஓபிஎஸ், அதிமுக தொண்டர்களுக்கு நன்றி" என கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஜி அமைச்சர் சொத்துக்குவிப்பு வழக்கு; விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Ex-minister Vijayabaskar asset transfer case adjourned to January 6

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்கள் வேண்டும் என்று சில விசாரணை நாட்கள் சென்ற நிலையில், கடந்த 2 வாய்தாவிற்கு முன்பு சுமார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட சொத்து ஆவண நகல்கள் விஜயபாஸ்கர் தரப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று புதன்கிழமை விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுடன் ஆஜரான நிலையில், அடுத்த வாய்தாவின் போது வழக்கு விசாரணை செய்யலாம் என்று கேட்கப்பட்டதால், அடுத்த வாய்தா ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Next Story

செவிலியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் (படங்கள்)

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி அரசுப் பணிக்கு காத்திருக்கும் செவிலியர்கள் கொரோனா காலத்தில் ஒப்பந்தப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். தற்போது தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.