ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்த நிலையில் நாடு முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தநிலையில் அங்கு உயிரிழந்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்ற வேண்டும் என்று சொன்னார்கள். ஏற்றி விட்டோம். அதற்காக இன்று ஒன் ஹவர் ஆகிவிட்டது. மொத்தத்தில் கோவிலில் இருக்கக்கூடியவர்களை இரண்டு ஸ்டாப்பாக பிரிக்க வேண்டும். ஒன்று அறநிலை துறை அதிகாரிகள். இன்னொருவர்கள் கோவிலில் உள்ள ஸ்டாப். இவர்களை அறநிலையத்துறை அதிகாரிகள் என டிபார்ட்மெண்ட் ஏற்றுக் கொள்வதில்லை.
இதை யாரும் கவனிக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இதனை கவனிக்க வேண்டும். முக்கியமாக அரசியல் கட்சிகள் எதற்கெடுத்தாலும் கோவிலில் உள்ள அர்ச்சகர்களின் குரல்வளையை பிடிக்கிறார்கள். நல்லா புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் வேற, அவர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் இல்லை. மணியடிப்பவர்கள், மெய்க்காப்பாளர்கள், வாட்ச்மேன், கணக்குப்பிள்ளை, கோவில் சூப்பிரண்ட் என்று இருப்பார்கள். இவர்கள் யாரையும் டெம்பிள் ஸ்டாப்பாக எடுத்துக் கொள்வதில்லை'' என்றார்.