Skip to main content

ஹெல்மெட் இல்லையா? ஈரோட்டில் வாகனங்கள் பறிமுதல்..!

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

No helmet? Vehicles confiscated in Erode ..!

 

ஈரோட்டில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், அதேபோல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என ஈரோடு எஸ்.பி. சசிமோகன் அறிவித்திருந்தார். ஆனால்  பெரும்பாலான வாகன ஓட்டிகள் இந்த அறிவிப்பை பின்பற்றவில்லை. இதனால் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் தொடர்ந்து அபராதம் விதித்து வந்தனர். மேலும் ஹெல்மெட் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தனர்.  

 

கரோனா பரவல்  காரணமாக பொது போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பிறகு தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பி போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 13 ந் தேதி  முதல் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் கட்டாய ஹெல்மெட் உத்தரவு 13 ந் தேதி அமலுக்கு வந்தது. இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

ஈரோடு மாநகர் பகுதியில் காளைமாடு சிலை, ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் நினைவு தூண், அரசு மருத்துவமனை ரவுண்டானா, கருங்கல்பாளையம் உட்பட ஏழு இடங்களில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் டவுன் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகன ஓட்டிகளை நிற்க வைத்து அவர்களின் வண்டிச் சாவியை வாங்கிக்கொண்டு அபராதம் விதித்து இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மாநகர் பகுதியில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டன.

 

No helmet? Vehicles confiscated in Erode ..!

 

இதைப்போல் கோபி பகுதியில் பல்வேறு இடங்களில் போலீசார் தனித்தனியாகச் சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகனங்களை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் விதித்ததோடு அவர்களுக்குச் சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் லைசென்ஸ் இல்லாமல் வந்த வாகனங்களும் பறிமுதல் செய்தனர். கோபி பகுதியில் 350 இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதைப்போல் அம்மாபேட்டை பகுதிகளிலும் போக்குவரத்து போலீசார் போலீசாருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்தி அந்த வாகனங்கள் பறிமுதல் செய்தனர். அம்மாபேட்டை பகுதியிலும் 300 வாகனங்களுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

 

udanpirape

 

நேற்று முதல் நாள் என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களைச் சிறிது நேரம் வைத்து விட்டு அந்த வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவது அவசியம் குறித்து போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இன்று முதல் ஹெல்மெட் அணியாமல் வந்தால்  இருசக்கர வாகனம்  கண்டிப்பாகப் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதைப்போல் சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி என மாவட்டம் முழுவதும் போலீசார் போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமல் வந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.

 

No helmet? Vehicles confiscated in Erode ..!

 

மாவட்டத்தில் ஒரே நாளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் சிறிது நேரத்தில் உரியவர்களிடம் வாகனம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.