Skip to main content

நித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி? அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்!

Published on 04/12/2019 | Edited on 04/12/2019

பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா, 2013ஆம் ஆண்டு தனது மூன்று மகள்களையும் பெங்களூரில் நித்யானந்தா நடத்தும் கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். ஆனால் அவர்கள் பெங்களூரில் இருந்து அஹமதாபாத்திலுள்ள நித்தியானந்தாவின் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த செய்தி அறிந்து அதிர்ச்சியான ஷர்மா, தனது மகளை பார்க்க அஹமதாபாத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவரை மகள்களை பார்க்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஷர்மா, தனது மகள்களை மீட்டுத் தருமாறு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையும், குஜராத் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பின்பு தொடர் புகார் வந்து கொண்டிருப்பதால் ஹீராபூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மூட குஜராத் அரசு உத்திரவிட்டுள்ளது.   
 

nithy



 

nithy



இந்த நிலையில்  தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும், தற்போது அவருடன் இரண்டு பெண் சீடர்களும், குஜராத்தில் புகார் கூறிய ஜனார்த்தன ஷர்மாவின் மூத்த மகளும், 30 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்களும் அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கென்று தனி 'வெப்சைட்' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த தீவை தனி நாடு போல் உருவாக்க நித்தியானந்தா திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர். மேலும் அந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் என அந்த நாட்டு அரசு உதவியுடன் இதெல்லாம் செய்ய போவதாக கூறுகின்றனர். இந்த தீவு வாங்கும் அளவுக்கு நித்தியானந்தாவிற்கு பணம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த பணம் எல்லாம் உலகம் முழுவதும் இருக்கும் நித்தியானந்தா பக்தர்களிடம் நிதியாக பெற்ற பணம் என்று கூறிவருகின்றனர். மேலும் எத்தனை கோடிக்கு இந்த தீவை வாங்கினார் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவராமல் ரகசியமாக உள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதே குற்றச்சாட்டு - சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை மீது மீண்டும் புகார்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
complaint against Sundhara Travels actress radha

முரளி, வடிவேலு உள்ளிட்ட பல பேர் நடிப்பில் 2002ல் வெளியான சுந்தரா ட்ராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. தொடர்ந்து அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்பு நடிப்பிலிருந்து விலகியிருந்தார். 

இந்த சூழலில் கடந்த மாதம் ராதா மீதும் அவரது மகன் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த டேவிட் ராஜ், தன் மகனை இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ராதா தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் கொடுக்கப்பட்டு, அதன் விசாரணை நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவர் தரப்பில், ராதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முரளியை ராதா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முரளிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முரளியின் புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து ராதா மீது ஒரே மாதிரியான புகார்கள் எழுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் மரணம்; கணவர் பரபரப்பு புகார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Family planning woman passed away suddenly

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே உள்ள கோடேபாளையத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (30). இவரது மனைவி துர்கா (27). கடந்த 2018ல் இருவருக்கும் திருமணமானது. இவர்களுக்கு நான்கரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், 2-வது பிரசவத்துக்காக கடந்த 20ம் தேதி துர்காவை புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அன்றைய தினம் மதியம் சுக பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அவரது குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துக் கொண்டனர். தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை துர்காவுக்கு குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் செய்யப்பட்டது. மாலையில் அவருக்கு 106 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ரத்தப் போக்கும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து மருத்துவர்கள், உயர் சிகிச்சைக்காக துர்காவை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துர்கா, சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மனைவிக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவர்கள் தவறான சிகிச்சையளித்தன் காரணத்தால் தான் தன் மனைவி இறந்துவிட்டார். எனவே, உரிய முறையில் பிரேத பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கணவர் பன்னீர் செல்வம், புளியம்பட்டி போலீசில் புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.