
அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு பேராசிரியை நிர்மலாதேவி அழைத்த வழக்கில், ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் உதவிப் பேராசிரியர் முருகனும், ஆய்வு மாணவர் கருப்பசாமியும் இன்று ஆஜரானார்கள். உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதியரசர்கள் அமர்வு முன்பாக இன்று நிர்மலாதேவி விளக்கம் அளிக்கவிருப்பதால், ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இன்று அவர் ஆஜராகவில்லை. மே 13-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.