தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் நாகையை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டவர்களிடம் நள்ளிரவு வரையிலும் விசாரணை நடைபெற்றது. லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதை காட்டி நீண்ட நேரம் விசாரணை நடத்தியிருக்கின்றனர் என்.ஐ.ஏ அதிகாரிகள்.
தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்று 13 ம் தேதி காலை நாகப்பட்டினம் சிக்கல் பகுதியை சேர்ந்த அசன் அலி மற்றும் மஞ்சக்கொல்லை பகுதியை சேர்ந்த ஹாரிஸ் முஹமது மற்றும் சென்னையைச் சேர்ந்த முகமது புகாரி ஆகியோரது வீடுகள், அவர்களின் உறவினர்களின் வீடுகள், மற்றும் அலுவலகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். பல மணி நேரம் நடத்திய சோதனைக்குப் பின்னர் மூவரது வீடுகள் மற்றும் அலுவகத்தில் இருந்த 9 மொபைல் போன்கள், 15 சிம் கார்டுகள், 7 மெமரி கார்டுகள், 3 லேப்டாப், 6 ஹார்ட் டிஸ்க், 7 பென்டிரைவ்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்டவைகளை கைப்பற்றியதாக கூறினர். அதன் பிறகு மூன்றுபேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.
விசாரணையில், "வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்று இந்தியாவில் அன்சாருல்லா என்ற இயக்கத்தை உருவாக்கி இந்திய இறையாண்மைக்கு இடையூறு செய்ய நினைத்ததாகவும், இந்தியா மீது தாக்குதல் தொடுக்க சதித்திட்டம் தீட்டியதாகவும், 3 பேரும் தற்போது தங்கள் விசாரணையில் உள்ளதாகவும் தெரிவித்த என்.ஐ.ஏ அதிகாரிகள். தொடரந்து ஹாசன்அலி ஆகியோரை நாகை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் வைத்து நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவரையும் நாகை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வைத்துவிசாரித்த கையோடு, இருவரையும் காலை 7 மணிக்கு சென்னைக்கு அழைத்துச்சென்று பூந்தமல்லி சிறப்பு நீதி,மன்ற நீதிபதி செந்தூர்பாண்டியன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அவர்களை ஜூலை 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதனையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.