Skip to main content

என்.ஐ.ஏ சோதனை; வாலிநோக்கத்தில் சாலை மறியல் 

Published on 22/09/2022 | Edited on 22/09/2022

 

NIA check; Roadblock in Wali Nokham

 

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆள் சேர்த்தல் மேலும் அவர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய புகார்களின் அடிப்படையில் இன்று காலை 5 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனை இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.

 

பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகள் ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்திய அளவில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் கிராமத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில மீனவர் அணித் தலைவர் பரக்கத்துல்லாவிற்கு சொந்தமான இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர்.

 

இந்த கைதை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி பரக்கத்துல்லா வீட்டிற்கு முன் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பி போராட்டத்திலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 

 

மேலும் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனைகளை கண்டித்து போராட்டங்களும் சாலை மறியல்களும் மக்களால் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெங்களூர் சம்பவம்; மண்ணடியில் என்.ஐ.ஏ. சோதனை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Bangalore Incident; NIA raids mannadi

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில், அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்து தொடர்பான விசாரணையில் அது குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணையைக் கையில் எடுத்துள்ள நிலையில், பெங்களூரு குண்டுவெடிப்பில் தொடர்புடைய இருவர் கர்நாடக மாநிலம் ஷிமோகாவை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாகவும், சென்னையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் பொருட்களை வாங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபர்கள் பயன்படுத்திய தொப்பி சென்னை சென்ட்ரலில் வாங்கியுள்ளதும் உறுதியாகியுள்ளது. மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஷிமோகா ஐ.எஸ். மாடல் வழக்கில் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாகத் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியப் புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில், மண்ணடி மூட்டைக்காரன் தெருவில் அப்துல்லா என்பவர் வீட்டில் தேசியப் புலனாய்வு முகமை தற்போது சோதனை நடத்தி வருகிறது. பெங்களூர் வழக்கில் தொடர்புடைய இருவர் சென்னையில் தங்கியிருந்ததாக முன்பு தகவல்கள் வெளிவந்த நிலையில், மண்ணடி உள்ளிட்ட ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ சோதனை தற்பொழுது நடைபெற்று வருகிறது.

Next Story

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
enforcement department raided the house of former Viralimalai Vijayabaskar MLA

அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த விராலிமலை விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ மற்றும் அவரது மனைவி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் வாங்கியதாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து அங்கு கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில்  நடந்து வருகிறது.

அதேபோல விஜயபாஸ்கர் சென்னை, இலுப்பூர் வீடுகள், திருவேங்கைவாசல் கல்குவாரி, கிரசரில் வருமானவரித்துறை அதிரடி சோதனை செய்ததில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பெட்டிகளில் அள்ளிச் சென்றனர். அதற்கான விசாரணையும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆவணங்களின் அடிப்படையில் இன்று காலை முதல் விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர் மீதான குட்கா வழக்கும் நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

ர.ர.க்களோ, பாஜக கூட்டணிக்கு அதிமுக போகவில்லை என்பதால் எங்களை பயம் காட்ட இதுபோன்ற சோதனைகளை பாஜக அரசு செய்து வருகிறது. இது பாஜகவின் இயலாமையை காட்டுகிறது என்கின்றனர்.