Skip to main content

தாயின் இறுதிச் சடங்கில் வந்த செய்தி; மறுநாளே நேரடியாக சென்று உதவிய அமைச்சர்! நெகிழ்ந்த மக்கள்!!

Published on 25/05/2021 | Edited on 25/05/2021

 

The news that reached the ear at the mother's funeral; The minister who went directly the next day and helped! Flexible people !!

 

'அன்றாட சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிக்கிறோம்’ என நரிக்குறவர் இன மக்கள் தங்களது நிலைமை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட, தன்னுடைய தாயின் இறுதிச் சடங்கு முடித்த கையோடு பாதிக்கப்பட்ட மக்களின் இடத்திற்கே சென்று நிவாரணப் பொருட்களை வழங்கி அசத்தியுள்ளார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான பெரியகருப்பன்.

 

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து நான்குமுறை வெற்றிபெற்று, தற்போது தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக பணியாற்றிவருபவர் பெரியகருப்பன். இவரது தாயாரான கருப்பாயி அம்மாள், வயது முதிர்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமையன்று (23.05.2021) இயற்கை எய்தினார். சொந்த ஊரான அரளிக்கோட்டையில் அன்று மாலையே இறுதிச் சடங்கு நடைப்பெற்று முடிந்தது. இந்நிலையில், திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்திரா நகரைச் சேர்ந்த நரிக்குறவ இனமக்கள், ‘அன்றன்று ஊசி, பாசி கோர்த்து விற்றால் எங்களது வயிற்றைக் கழுவ முடியும். இந்தக் கரோனா காலத்தில் அதற்கான வாய்ப்பு இல்லை. வேறு எவ்வித வேலையும் இல்லை, எங்களுடைய வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசு எங்களுக்கு உதவ வேண்டுமென’ சமூக வலைதளங்களில் பேசியுள்ளனர். 

 

இது வைரலாகி, மாவட்டம் முழுமைக்கும், குறிப்பாக மாவட்ட நிர்வாகத்திற்கும் சென்றடைந்தது. அமைச்சர் தாயின் இறுதிச் சடங்கு நடைப்பெற்ற அதே வேளையில் அமைச்சரின் காதிற்கும் இந்த விஷயம் செல்ல, “எனக்கு குடும்பமென்பது மக்கள்தான். ஆகவே நாளைக்கே அங்கு சென்று நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும்” என மாவட்ட நிர்வாகத்திற்கு உத்திரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி, தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் சுரேந்திரன், திருப்பத்தூர் வட்டாட்சியர் ஜெயந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருக்க திங்களன்று நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் இந்திரா நகருக்கே சென்றார். அங்குள்ள 117 குடும்பங்களுக்கும் தலா 10 கிலோ அரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ கடலைப்பருப்பு, மிளகாய்ப்பொடி ¼  கிலோ, மஞ்சள்பொடி 100 கிராம், ஆவின் ½ லிட்டர் பால் ஆகியவை கொண்ட தொகுப்புகளை வழங்கினார் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன். 

 

தொடர்ந்து பேசுகையில், “தற்போது கரோனா நோய்த்தொற்று காலத்தைக் கருத்தில்கொண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், கடந்த வாரம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதற்கட்டமாக ரூ. 2,000 வழங்கப்பட்டுள்ளது. தற்போது இப்பகுதி மக்களின் பொருளாதாரச் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, உடனடியாக வழங்கப்பட்டுள்ளது. இப்படி எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், அது எவ்வாறு அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணி திட்டங்களை செயல்படுத்தக்கூடிய தலைவர்” என தெரிவித்தார். தாயின் இறுதிச்சடங்கு முடித்த கையோடு முடி இல்லாமல் மொட்டைத்தலையுடன் மக்களுக்கு சேவை செய்யவந்த அமைச்சர் பெரியகருப்பனை எண்ணி நெகிழ்கின்றனர் திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிவாசிகள்.

 

படங்கள்: விவேக்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ. 24 லட்சம் பறிமுதல்; பறக்கும் படை அதிகாரிகள் தீவிரம்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவர் தனியார் வங்கியிலிருந்து ரூ 14 லட்சத்து 54 ஆயிரம் ரூபாயை எடுத்துகொண்டு திம்மாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் ஏ.டி.எம் -ல் நிரப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றுள்ளார். அப்போது வாணியம்பாடி அடுத்த தும்பேரி கூட்டு சாலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஷோபனா தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் சென்ற பாலாஜியை நிறுத்தி சோதனை செய்த போது அவருடைய பையில் வைத்திருந்த  ரூ.14.54 லட்சம் பணம் இருப்பது கண்டறிந்தனர். அவர் எடுத்து சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால்  அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஷோபனா தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை  வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அஜித்தா பேகத்திடம் ஒப்படைத்தனர்.

Near Tirupattur taken without documents Rs. 24 lakh forfeited

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே குழு ஏ பறக்கும் படை அலுவலர் வினோதினி தலைமையில் சோதனை செய்த பொழுது, திருப்பத்தூர் அடுத்த திம்மனாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் கோவிந்தராஜ் என்பவர் முறையான ஆவணம் இன்றி  காரில் சுமார் 9,32,400 ரூபாய் ரொக்க பணத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியில் கடன் வாங்கிய நபரிடம் திரும்ப கொடுப்பதற்காக எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார்.

தேர்தல் விதிமுறைப்படி தனி நபர் ஆவணமின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாயை பறக்கும் படை அலுவலர் வினோதினி கருவூலத்தில் ஒப்படைக்க சென்றபோது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணம் சார் கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாளில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பறக்கும் படையினர் 23 லட்சத்தை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.