!["New waters must be created" - Chief Minister MK Stalin!](http://image.nakkheeran.in/cdn/farfuture/02ueMBO0_NCK-9Udf7sTL3Uz12lmmEInh921U0WFeyE/1627147421/sites/default/files/inline-images/cm32222444.jpg)
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (24/07/2021) நீர்வளத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாநிலம் முழுவதும் நீர்நிலைகளைப் புனரமைத்து நீர் ஆதாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். அணைகள் இல்லாத மாவட்டங்களில் புதிய நீர் சேமிப்பு கட்டுமானங்கள் அமைத்திட வேண்டும். மழைக் காலத்தில் கிடைக்கும் நீரை முழுமையாக சேமித்து புதிய நீர்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்" என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.