ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ‘எம்.ஜி.ஆர் மாளிகை’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு 'எம்.ஜி.ஆர் மாளிகை' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும், பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த மாநாட்டில் பொன்விழா இலச்சினை பதித்த தங்க முலாம் பூசிய பதக்கங்கள் அதிமுக முன்னோடிகளுக்கு வழங்கப்படும். பெரியார், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.