Skip to main content

30 ஆயிரம் லோன் வேணுமா...? லோன் ஆப்பை நம்பிய தூய்மைப்பணியாளர் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

 Need a loan of 30 thousand ...? Tragedy for the cleaning lady who relied on the loan app!

 

சென்னை அம்பத்தூரில் தூய்மை பணியாளர் பெண்ணுக்கு கடன் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சென்னை அம்பத்தூர் மதனாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் கணவரை இழந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வறுமையில் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடன் பெறும் முனைப்பில் இருந்த அந்த பெண்ணுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர்,  'இன்ஸ்டன்ட் லோன் ஆப்' மூலம் கடன் வேண்டுமா என கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என தெரிவித்த நிலையில், கடன் தருவதாக ஒப்புக்கொண்ட அந்த நபர், புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதனை நம்பி புகைப்படம் மற்றும் அவர் கேட்ட ஆவணங்களை அப்பெண்ணும் அந்த நபருக்கு  அனுப்பி வைத்துள்ளார்.

 

அதன்பிறகு அப்பெண்ணைத் தொடர்பு கொண்ட அதே மர்ம நபர், 30 ஆயிரம் ரூபாய் கடன் ரெடியாகி விட்டது. ஆனால் அதற்கு 3,000 ரூபாய் முன்பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவிக்கவே, அவரது புகைப்படத்தினை தவறாகச் சித்தரித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார் அந்த மர்ம நபர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் அளவுக்கு அதிகமான வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சினிமா பாணியில் திருடர்களை மடக்கி பிடித்த போலீஸ்!

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

The police caught the thieves in cinema style at ambattur

 

சென்னையை அடுத்த அம்பத்தூர் அடுக்குமாடி குடியிருப்பில் திருடிவிட்டு தப்பி சென்ற திருடர்களை, காவல்துறையினர் சினிமா பாணியில் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே தமிழ்நாடு வீட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த குடியிருப்பு வீட்டில் உள்ள நகைகளை திருடப்பட்டுள்ளதாக அம்பத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

 

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த இருவரிடம் விசாரிக்க முயன்ற போது, காவல்துறையினர் தங்களை நோக்கி வருவதை கண்டு சுதாரித்த அந்த இருவரும் தங்களுடைய இருசக்கர வாகனத்தை எடுத்து தப்பிச் சென்றனர். அப்போது, காவல்துறையினர், சினிமா பாணியில் சுமார் 6 கி.மீ வரை துரத்திச் சென்று அவர்களை மடக்கிப் பிடித்தனர். அதன் பிறகு, அவர்களிடம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்த வெள்ளி கொலுசு, தங்க மோதிரம், செயின், கட்டுக்கட்டாக பணம் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் இருவரும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் கலையரசன் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள்தான் அடுக்குமாடி குடியிருப்பில் திருடியுள்ளதாக காவல்துறையினருக்கு தெரியவந்ததை அடுத்து அவர்களை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ரூ. 1.4 கோடி மோசடி; பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

1.4 crore issue 4 people incident including a BJP executive

 

கடன் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்த பாஜக நிர்வாகி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

காரைக்குடியைச் சேர்ந்த பாஜக மாநில விவசாய அணியின் துணைத் தலைவர் ராஜசேகர் உட்பட 4 பேர், 70 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி 1.4 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது குறித்து இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரிந்தர் பால் சிங் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

 

அந்தப் புகாரின் பேரில், பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் ராஜசேகர் உட்பட போரூரைச் சேர்ந்த ரஜிதா மெர்னல்சன், கே.கே. நகரைச் சேர்ந்த ராமு, வளசரவாக்கத்தைச் சேர்ந்த தசரதன் என 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் நான்கு பேரிடம் இருந்து ரூ.1.01 கோடி ரொக்கப் பணம் மற்றும் 2 கார்கள், 2 செல்போன்கள் மற்றும் போலி முத்திரைத் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்