கும்பகோணம் ,தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து வாங்க பெற்ற ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டு கலந்திருப்பதாக குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள இரண்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், தஞ்சையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலும் வாடிக்கையாளர்கள் தங்களின் பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். இதில் கள்ள நோட்டுக்களும் கலந்துள்ளது. பணம் வழக்கம்போல சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அனுப்பபட்டது. அப்போது அங்குள்ள அதிகாரிகள் பணத்தை வழக்கத்தைப்போல ஆய்வு செய்தனர்.அதில் 38 கள்ள நோட்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதன்பிறகு இந்த பணம் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் யார், அதை வாங்கிய அதிகாரிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அதோடு தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகாரும் செய்தனர். அதன் பேரில் போலிசார் வழக்குப்பதிந்து வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதிக அளவில் பணம் டெபாசிட் செய்தவர்கள் யார், வெளிமாநிலத்தவர் யாரும் புழக்கத்தில் விடுவதற்காக கள்ளநோட்டை செலுத்தியுள்ளார்களா என பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.