டெல்லியில் நடக்கும் தேசிய ரோபோடிக்ஸ் போட்டியில் இந்திய அளவில் 20 மாநிலங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் சனிக்கிழமை மாணவர்களுக்கான அணிவகுப்பு நடந்த போது, அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஆங்கிலம், இந்தியில் தங்கள் பள்ளி பெயர் தாங்கிய பதாகையுடன் வந்தனர். ஆனால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆலங்குடி என்று தாய் மொழியான தமிழ் மொழி பதாகையுடன் வந்த போது அரங்கம் முழுவதும் முழுவதும் இருந்த மாணவர்கள் அவர்களையே பார்த்தனர்.
![NATIONAL ROBOTICS COMPETITION IN DELHI SELECT IN ALANGUDI GOVT SCHOOLS](http://image.nakkheeran.in/cdn/farfuture/aRHyGQJ1r9gVnNcJCUxVBHryrAv-R0Y8kQ1vlmQlhMA/1576390883/sites/default/files/inline-images/DELHI4.jpg)
ரோபோடிக்ஸ் போட்டியில் தமிழ்நாட்டில் நடந்த தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் படைப்பு தேர்வானது. தமிழ்நாட்டில் இருந்து சீனியர் பிரிவில் ஆலங்குடி அரசுப் பள்ளி மாணவர்கள் நிஷாந்த், சிவயோகேஸ்வரன், டேனியல் ஆகிய மூன்று மாணவர்களும் தேர்வாகி தேசிய போட்டிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
![NATIONAL ROBOTICS COMPETITION IN DELHI SELECT IN ALANGUDI GOVT SCHOOLS](http://image.nakkheeran.in/cdn/farfuture/uaiv6cjz3Mnh3OcUtf66rb84YR26T_OZYLrMd9PyBc4/1576390899/sites/default/files/inline-images/AA_0.jpg)
இந்த போட்டி 15- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று நடக்கிறது. இதற்காக வழிகாட்டி ஆசிரியர்கள் முகமது உமர், சுப்பிரமணியன், சங்கர் கணேஷ் ஆகியோருடன் சென்றனர். கடந்த சில நாட்களாக தமிழ் மொழி பற்றி பாராளுமன்றத்தில் காரசார விவாதங்கள் நடக்கும் நிலையில், இப்போது தமிழக மாணவர்களும் உணர்வோடு தாய் மொழியில் பதாகையை பிடித்துக் கொண்டு ஊர்வலம் சென்றது டெல்லியின் கவனத்தை ஈர்த்துள்ளது.