சென்னை – அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் வழக்கறிஞர் ஜெகதீசனை (வயது 33) காவல்துறை விசாரித்து வருகிறது. அப்போது, சில விபரங்கள் கிடைத்திருக்கின்றன. இவருடைய வீடும் வழக்கறிஞர் அலுவலகமும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ளது. பா.ஜ.க.வைச் சேர்ந்த இவருடைய விசிட்டிங் கார்டில் பிரதமர் நரேந்திரமோடியின் படமும் தாமரைச் சின்னமும் இடம் பெற்றிருக்கிறது. விசிட்டிங் கார்டில் ‘தாய் மண்ணே வணக்கம்! என்று தேசிய பணியில்’ என்று அச்சிட்டிருக்கிறார் ஜெகதீசன். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆதார் கார்டில், புதுப்பூங்குன்றம், திருப்பத்தூர், ஏ.கே.மோட்டூர், வேலூர் என்ற முகவரி இருக்கிறது.
[
தமிழர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிகாட்டிய தந்தை பெரியார் சிலை மீது காலணி வீசி அவமதிப்பதா தேசிய பணி?