ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை கைதியாக கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளார் நளினி. இவர் தனது மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும், வயதான தனது தாயாரை பார்த்துக்கொள்ள வேண்டும்மென 6 மாதம் பரோல் வேண்டும்மென கேட்டு அரசாங்கத்துக்கு மனு செய்தார். அதனை அதிமுக அரசாங்கம் பரிசீலனை செய்யவில்லை.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு கிடப்பில் இருந்துவந்தது. இந்நிலையில் 45வது நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு ஏப்ரல் 15ந்தேதி வருகிறது. இந்த வழக்கில் தன் சார்பில் தானே ஆஜராகி நளினி வாதாடவுள்ளார் என்கிற தகவல் அவர் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.
வாதியே தனது வழக்கில் ஆஜராக சட்டத்தில் இடம்முண்டு. அதன்படியே நளினி தனது பரோல் வழக்கில் ஆஜராகவுள்ளார். அப்போது தனது மனதில் அழுத்திக்கொண்டுள்ள விவகாரத்தை நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.