நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்று நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி துபாயில் நடந்த திருமண விழாவில் பங்கேற்க சென்ற போது சனிக்கிழமை இரவு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், நடிகை ஸ்ரீதேவி மறைவு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. வருத்தம் தருகிறது என தெரிவித்துள்ளார். நல்ல நண்பரை இழந்து விட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி 1976-ம் ஆண்டு பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படம் மூலம் தனது 13வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் ஸ்ரீதேவியுடன் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ளனர். தொடர்ந்து 16 வயதினிலே, பிரியா, ஜானி உள்ளிட்ட படங்களில் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார்.