Advertisment

கரோனாவிலிருந்து மீண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், சிறுநீரக தொற்று, சிறுநீரக செயலிழப்பு காரணமாக, நேற்று முன்தினம் (24/02/2021) சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (26 பிப்.) காலமானார். சென்னை திருமங்கலம் அருகே உள்ள டிவிஎஸ் காலனியில்,அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி மற்றும் நக்கீரன் ஆசிரியர் ஆகியோர் மறைந்த தா.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.