கோப்புப்படம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாமிர்த ஏரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள காசி நந்திகேஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடத்த விழா குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முறையான அனுமதி வாங்காததாக புகார்கள் எழுந்தது. இதனால் நாளை நடத்த கும்பாபிஷேகம் தடை விதிக்கப்பட்டது. முறையாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் பேபி விழா குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நாகை மாவட்ட டிஎஸ்பிக்கள் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட கோவில் முன்பு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.