Skip to main content

4 மாத குழந்தை உயிரிழப்பில் மர்மம்; தந்தை கைது; மனைவிக்கு வலை

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
Mystery in 4-month-old baby's lose their live; Father arrested; Net for wife

சிவகங்கையில் 4 மாத குழந்தை மர்மமாக உயிரிழந்த நிலையில் தந்தையே புதைத்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் நாட்டார்குடி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி மஞ்சு. இவர்களுக்கு நான்கு மாதத்தில் ஒரு மகன் இருந்த நிலையில் இருவருக்கும் அடியே அடிக்கடி குடும்ப தகராறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவது ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கோவித்துக்கொண்டு மனைவி மஞ்சு நாகர்கோவிலில் உள்ள தாயார் வீட்டுக்குச் சென்று விட்டார்.

மனைவி மஞ்சுவையும் நான்கு மாத குழந்தையும் காணாமல் சந்திரசேகர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அப்பொழுது வாய்க்கால் ஒன்றின் அருகே குழந்தையை வைத்துவிட்டு வந்து விட்டதாக செல்போன் மூலம் மஞ்சு தகவல் தெரிவித்துள்ளார். சந்திரசேகர் வாய்க்கால் ஓரம் சென்று பார்த்த பொழுது குழந்தை பையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து யாருக்கும் சொல்லாமல் சந்திரசேகர் குழந்தையை புதைத்துள்ளார்.

4 மாத குழந்தை மர்மமாக உயிரிழந்தது அந்தப் பகுதி மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, காவல்துறைக்கு புகார் போனது. புகாரின் அடிப்படையில் போலீசார் குழந்தையின் தந்தை சந்திரசேகரை விசாரித்தனர். மேலும் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. குழந்தையின் உடலில் தலையில் தாக்கப்பட்டதைப் போல காயம் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் சந்திரசேகரை போலீசார் கைது செய்துள்ளனர். தாய் மஞ்சுவை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்