திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே மர்மப்பொருள் வெடித்து வளர்ப்பு நாய் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த 'புன்னை' என்ற கிராமத்தை சேர்ந்த புஷ்பா. இவர் நேற்று இரவு தோட்டத்திற்கு சென்ற நிலையில் அவரை பின் தொடர்ந்து அவரது வளர்ப்பு நாயும்சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பலத்த சத்தம் கேட்டதைஅடுத்து ஊர்மக்கள் தோட்ட பகுதிக்கு சென்று பார்த்தனர். அங்கு புஷ்பாவுடன் சென்ற வளர்ப்பு நாய் வாய் சிதறி உயிரிழந்து கிடந்தது. காட்டு பன்றிகளுக்குவைக்கப்படும் அவுட் காயைகடிதத்தில் ஏற்பட்ட விபத்தில் நாய் இறந்திருக்கலாமாஎன்றகோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.