Mysterious men who enter the house and steal a bicycle!

வேளாங்கண்ணி அருகே வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை இரண்டு மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Advertisment

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரிய நாட்டுதெருவைச் சேர்ந்த செல்வம் என்பவர், வீட்டில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். இந்த சூழலில் நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். காலையில் தனது இருசக்கர வாகனம் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அவசர அவசரமாக அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை சோதித்து பார்த்தார். அதில் இரண்டு மர்ம நபர்கள் வாகனத்தை திருடி செல்வது தெரிந்தது. இந்த வீடியோ காட்சிகளை வைத்து வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Advertisment