Skip to main content

டூவீலர்களை திருடிச் சென்ற மர்ம கும்பல்; 4 பேர் சிறையிலடைப்பு

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

NN

 

வேலூர் வசந்தபுரம் பகுதியில் பச்சையப்பன் மற்றும் சுதாகர் ஆகியோரின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு டூவீலர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து வாகன உரிமையாளர்கள் இருவரும் தனித்தனியே வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட காவல் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையம் (Control Room) மூலம் சுமார் 100 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் டூவீலர்களை திருடிய கும்பல் குறித்து அடையாளம் காணப்பட்டது.

 

பின்னர் டூவீலர்களை திருடிச் சென்ற அரவிந்தன்(20), சந்தோஷ்(23), பிரதீப்(23), சுல்தான்(18) ஆகியோரை தடாலடியாய் கைது செய்து டூவீலர்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நள்ளிரவில் நோட்டமிடும் மர்ம நபர்; போலீசாருக்கு கோரிக்கை வைக்கும் பொதுமக்கள்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
The Mysterious Man Who Strikes at Midnight; Citizens making requests to the police
கோப்புப்படம்

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி 17வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான கமலா ரைஸ் மில் வீதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஒரு சிறிய வீதியில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் சட்டை அணியாமல் வெறும் டவுசருடன் ஒவ்வொரு வீடாக நோட்டமிட்டவாறு, பூட்டியுள்ள வீடுகளைக் கண்காணித்துச் செல்வது அங்குள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது.

ஏற்கனவே இதேபோன்று இரண்டு முறை மர்ம நபர் நடமாட்டம் இருந்ததாகவும், தற்போது மூன்றாவது முறையாக நள்ளிரவில் மர்ம நபர் நடமாட்டம் இருப்பதாகவும் கூறி கமலா ரைஸ் மில் வீதியை சேர்ந்தவர்கள் மர்ம நபர் நடமாட்டம் குறித்த சிசிடிவி கேமரா பதிவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அருகில் உள்ளவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு பதிவிட்டு வருகின்றனர்.

நள்ளிரவில் மர்ம நபர் நடமாட்டம் காரணமாக கமலா ரைஸ் மில் வீதி, மேட்டு வளவு, புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் சிசிடிவி கேமரா பதிவில் உள்ள நபர் குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

கபாலீஸ்வரர் கோவில் வாசலில் தீ வைப்பு; ஒருவர் கைது

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Setting fire to Kapaleeswarar temple gate; One arrested

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அண்மையில் இளைஞர்கள் சிலர் சினிமா பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ காட்சிகள் வைரலான நிலையில், சமூக வலைத்தளத்தின் வாயிலாக இளைஞர்கள் மன்னிப்பு கேட்டிருந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கபாலீஸ்வரர் கோவில் வாசலில் மர்ம நபர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆறாம் தேதி கோவிலுக்கு வந்த நபர் ஒருவர் கோவில் ராஜகோபுர பிரதான வாசலிலேயே தீ மூட்டத் தொடங்கினார். கோவிலுக்காக இரவு நேரக் காவலர்கள் நியமிக்கப்படவில்லை எனப் பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாகக் கோவில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகாரும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் சம்பந்தப்பட்ட நபரைப் பற்றி விசாரித்த பொழுது, அவருடைய பெயர் தீனதயாளன் என்பதும் கொசுத் தொல்லைக்காக தீ வைத்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் விசாரணையில், செருப்புகளை ஒன்றாகச் சேர்த்து பெட்ரோல் ஊற்றி அந்த நபர் தீயிட்டதும் தெரியவந்துள்ளது.