
தமிழகத்தில் பருவநிலை காரணமாக இன்ஃபுளுயன்சா உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு அதற்கான சிகிச்சைகளை மருத்துவமனைகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு சார்பில் காய்ச்சல் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லையில் மர்ம வைரஸ் காய்ச்சலால் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நெல்லையை பொறுத்தவரை வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்து மூலகரிப்படி பகுதியில் வசித்து வந்த ஆதிநாராயணன் என்பவரின் 12 வயது மகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மூலகரிப்படி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மர்மக் காய்ச்சலால் சிறுமி உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)