Skip to main content

திருத்தணி இரட்டைக்கொலையில் திடுக்... கைது செய்யப்பட்ட குற்றவாளி வாக்குமூலம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வீட்டிபுதூர் பாலாஜி நகரை சேர்ந்த எம்.ஆர்.எப்  ஊழியர் பணப்பெருமாள். இவர் இரவு பணிக்கு சென்றுவிட வீட்டில் தனியாக இருந்த இவரது மனைவி வீரலட்சுமியும், பத்து வயது மகனான போத்திராஜூம் கடந்த எட்டாம் தேதி அதிகாலை கொடூரமாக கொலை செய்யப்பட்டு வீட்டில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். வீட்டில் இருந்த 21 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

 

murder incident in thiruthani

 

திருத்தணி அரக்கோணம் நெடுஞ்சாலையோரம் அமைந்திருந்த வீட்டில் இப்படி கொலை, கொள்ளை சம்பவம் நடந்ததால் இதை நடத்தியது வடமாநில கொள்ளையர்கள் இருக்கலாம் என போலீசார் விசாரணை செய்து வந்தனர். ஆனால் வீட்டில் கைப்பற்றப்பட்ட கைரேகைகள் மற்றும் சம்பவம் நடந்த இடத்தில் 5 மணி அளவில் அந்த பகுதியில் காணப்பட்ட செல்போன் சிக்னல் அடிப்படையில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த வெங்கடேசன் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது இரட்டை கொலை பற்றிய மர்மம் வெளியானது.

 

murder incident in thiruthani

 

அதே பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்த வெங்கடேசன் பெருமாள் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர். சிறுவயது முதலே பெருமாளின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் சேர்க்கை சரி இல்லாததால் பால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதை அடுத்து கடனில் சிக்கித்தவித்த வெங்கடேசன் ஏதாவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபடலாம் என திட்டமிட வெங்கடேசன் தனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் புகுந்து கொள்ளை அடிப்பது என்று முடிவு செய்துதான்.

 

murder

 

 

murder

 

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட பெருமாள் வீரலட்சுமி தம்பதி வசதியாக இருப்பதாகவும், கழுத்தில் 10 சவரன் தாலி சங்கிலி அணிந்திருந்ததால் லட்சுமியிடம் ஏராளமான நகை இருக்கக்கூடும் என வெங்கடேசன் அதன்படி கடந்த எட்டாம் தேதி பணபெருமாள் இரவு பணிக்கு சென்றதை அறிந்து அவரது மனைவி வீரலட்சுமி வாசலில் கோலம் போட வெளியில் வரும்பொழுது வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்துவிடலாம் என்ற திட்டத்தை நிறைவேற்ற முகமூடியுடன்  வீட்டிற்கு வெளியே காத்துக் கொண்டிருந்துள்ளான்.

 

 

murder murder

 

தண்ணீர் வாளியுடன் வெளியே வந்ததும் பக்கவாட்டு சுவர் வழியாக ஏறி வீட்டிற்குள் குதித்துள்ளான் சிறிய இரும்பு கதவை தாண்டியபோது ஏற்பட்ட சத்தம் கேட்டு வெளியில் இருந்து வீட்டுக்குள் வந்து இருக்கிறார் வீரலட்சுமி. அவரிடம் வீட்டிலுள்ள நகை பணத்தை கேட்டு மிரட்டியுள்ளான் வெங்கடேசன். சிறுவயது முதலே வீட்டிற்கு வந்து செல்பவன் என்பதால் அவனது குரலை வைத்து நீ வேங்கடேசன் தானே என வீரலட்சுமி அடையாளம் கண்டு கொண்டதால் அதிர்ந்த வெங்கடேசன் இரும்புக்கம்பியால் அவரை சரமாரியாக அடித்து சுவற்றில் இடித்து கொடூரமாக கொலை செய்துள்ளான்.

 

murder

 

சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட சிறுவன் போத்திராஜ் செல்போன் மூலம் தந்தைக்கு தகவல் கொடுக்க முயன்றதால் அயன்பாக்ஸ் வயரால் அவனது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளான் வெங்கடேசன். வீட்டுக்குள் யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக முன்பக்க கதவை உள்பக்கம் பூட்டி விட்டு வீரலட்சுமி கழுத்தில் கிடந்த தங்க தாலி சரடு மற்றும் பீரோவில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெங்கடேசன் தப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

 

 

கொலை நடந்த இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட தடயங்களை வைத்து வெங்கடேசனை கைது செய்துள்ளனர்  காவல்துறையினர்.

 

 

 

.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !