Published on 23/11/2023 | Edited on 23/11/2023

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 20-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு அலுவலகத்தில் முரசொலி மாறனின் உருவப் படத்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன், பகுதி செயலாளர்கள், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.