Skip to main content

தாராவியில் தவிக்கும் தமிழர்கள்... மீட்டு வர அரசு உதவ வேண்டும்... சரத்குமார் வலியுறுத்தல்

Published on 25/05/2020 | Edited on 25/05/2020
mumbai dharaviதாராவி உட்பட மும்பையில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்டு வர தமிழக அரசு உதவ வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.


அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவு வசிக்கும் பகுதியான தாராவியில், மக்கள் நெருக்கம் காரணமாக கரோனா பரவல் தீவிரமாக காணப்படுவதால் மக்கள் அச்சத்தால் சொந்த ஊர்களுக்கு திரும்ப போக்குவரத்து வசதியை எதிர்பார்த்துள்ளனர்.

தாராவியில் சிகிச்சை பெறுவதற்கான போதிய மருத்துவ வசதி இல்லை எனவும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் நெருக்கமாக செல்வதால் நோய் பரவுதல் அதிகரிக்கிறது.

 

 

Sarath Kumarஅதுமட்டுமன்றி, பெரும்பாலான தமிழர்கள் குடியிருப்புகளை காலி செய்து ஊர்களுக்கு திரும்புவதற்கு ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையங்களில் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். மேலும், பணிக்காக அங்கு சென்றவர்களை பிரிந்து தமிழகத்தில் வசிப்பவர்களும் அவர்களின் நிலையறிந்து தவிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

எனவே, தமிழக அரசு தாராவி உட்பட மும்பையில் சிக்கி தவிக்கும் தமிழர்களை அரசின் சுகாதார நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ரெயில் மூலம் மீட்டு அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“விஜய்க்கும் அந்தப் பெண்ணிற்கும் பிடிக்காதவர்கள் செய்திருக்கலாம்” - சர்ச்சை குறித்து ஜெய் ஆகாஷ்

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
actor jai akash about his rumour and vijay

இயக்குநர் கே. பாலச்சந்தர் தயாரிப்பில் ரோஜாவனம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் ஜெய் ஆகாஷ் . தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ஜெய் ஆகாஷை சந்தித்தோம். அப்போது அவரது சினிமா வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களை  நம்மிடையே  பகிர்ந்து கொண்டார். 

அவர் பேசுகையில், “ரோஜாக் கூட்டம்  படம் சூப்பர் ஹிட் ஆனதற்குப் பிறகு, நிறைய படங்கள் எனக்கு வந்தது. அந்த நேரத்தில் நான் படம் பண்ணாமல் இருந்ததற்குக் காரணம் என்னைப் பற்றிய  பொய்த் தகவல்கள் எல்லாம் க்ளியர் ஆக வேண்டும் என்பதற்காகத்தான். நான் டிகிரி முடித்து வந்ததும் மணிரத்னம்  என்னை 'அலைபாயுதே' படத்திற்காக அழைத்தார். சுஹாசினி என்னை 'ரோஜா வனம்' படத்திற்கு நான் சரியாக இருப்பேன் என என்னிடம் சொன்னார். அந்த சமயத்தில்தான் தமிழ் எனக்குச் சரியாகப் பேச வராத  காரணத்தால் 'அலைபாயுதே' படத்திற்கு தேர்வு செய்யாமல், 'ரோஜா வனம்' படத்தில் இரண்டாவது ஹீரோவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார்கள், அப்படித்தான் நான் அந்த படம் பண்ணினேன். 

அப்போதுதான் அந்த ரூமர் உருவானது. அது என்னை ரொம்ப அப்செட் ஆக செய்தது. அதைக் கேட்கும் போதெல்லாம் என்னால் ஒரு குடும்பத்தில் பிரச்சனையும் அந்தப் பெண்ணிற்குக் கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். யாரோ விஜய்க்கும் அந்தப்  பெண்ணிற்கும் பிடிக்காத  நபர்கள் இதைச் செய்திருக்கலாம். அது மிகவும் மோசமான ஒன்று. அதில் ஏன் என் பெயரை இழுத்தார்கள் என்று தெரியவில்லை. நான் விஜய்யை அடிக்கடி  விமான பயணத்தின்போது பார்த்தால் பேசுவேன், அவர் ஹைதராபாத் வந்தால் சந்திப்பேன், அவர் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ அதுபோல ஆகாஷ் அப்படி இல்லை என்று  என்னைப் பார்க்கும்போது அவருக்கும் தெரிந்திருக்கும். அந்த ரூமர் யாரோ உருவாக்கியது” என்றார்.

Next Story

“ஆதரவை வெறுப்பு பிரச்சாரமாக மாற்ற வேண்டாம்” - ஆசிஃப் அலி

Published on 18/07/2024 | Edited on 18/07/2024
Asif Ali REACTS To Ramesh Narayan Snubbing Him at Manorathangal Trailer Launch

மலையாளத்தில் ‘மனோதரங்கள்’ என்ற தலைப்பில் ஒரு ஆந்தாலஜி சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் மலையாள இலக்கியத்தில் புகழ்பெற்ற எம் டி வாசுதேவனின் 9 கதைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் கமல்ஹாசன், மோகன்லால், மம்மூட்டி, ஃபஹத் பாசில், பார்வதி திருவோத்து, பிஜு மேனன், ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி என ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் நடித்துள்ளனர். பிரியதர்ஷன், ரஞ்சித், ஷயாம்பிரசாத், அஸ்வதி வி நாயர், மகேஷ் நாராயணன், ஜெயராஜன், சந்தோஷ் சிவன், ரத்தீஷ் அம்பாட் உள்ளிட்டோர் இயக்கியுள்ளனர். 

இந்த சீரிஸ் ஆகஸ்ட் 15ஆம் தேதி மலையாளம் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.  இதில் இயக்குநர் ஜெயராஜ் இயக்கிய ஒரு படத்துக்கு மலையாள மூத்த இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண் இசையமைத்துள்ளார். இந்த சீரிஸின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. அதில் ரமேஷ் நாராயணுக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மலையாள நடிகர் ஆசிஃப் அலி மேடையிலிருந்து இறங்கி வந்து இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண் அமர்ந்திருந்த இடத்துக்கே வந்து கொடுத்தார். அப்போது அந்த விருதை அவர் கையால் வாங்க மறுத்த ரமேஷ் நாராயண், அதற்குப் பதிலாக இயக்குநர் ஜெயராஜைக் கொடுக்கச் சொல்லியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் ரமேஷ் நாராயண் ஆசிஃப் அலியை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது. அதோடு ஆசிஃப் அலிக்கு ஆதரவாகவும் அவர் எந்த எதிர்வினை ஆற்றாமல் இருந்ததற்காக பாராட்டுகளும் குவிந்தன. நடிகை அமலா பால், ஒரு நிகழ்வில் கூட, “நாம் வாழ்க்கையில் எதிர்பாராத பல சூழ்நிலைகளை சந்திப்போம். ஆனால் நாம் அதை எப்படி எதிர்கொள்கிறோம் என்பது முக்கியம். ஆசிப் அலியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது” எனக் கூறினார். 

இதனிடையே இசையமைப்பாளர் ரமேஷ் நாராயண், இந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்தார். மேலும் ஆசிஃப் அலி எனக்கு விருது கொடுக்க வருகிறார் என்பது எனக்குத் தெரியாது என்றும் மேடையில் ஏற்றப்பட்டு விருது கொடுக்கப்பட்டிருந்தால், என்னை நோக்கி யாரோ விருது கொடுக்க வருகிறார்கள் என்பதை அறிந்திருப்பேன் என்றும் யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை என்று விளக்கமளித்தார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து, ஆசிஃப் அலி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசுகையில், “மத அடிப்படையில் இந்த சம்பவத்தை பார்க்கிறார்கள். அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. அந்த நிகழ்வு ஒரு தவறான புரிதலால் எற்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தவறிழைத்ததால், இசையமைப்பாளர் குழம்பிவிட்டார். நீங்கள் வீடியோவை பார்த்தால் தெரியும், அவருக்கு விருது வழங்கிவிட்டு நான் நகர்ந்துவிட்டேன். 

இந்த சம்பவம் குறித்து அவரிடம் பேசினேன். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் என்னை அணுக முயன்று கொண்டிருக்கிறார். ஆனால் ஊடகத்தினர் என்னை தொடர்ந்து தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பாக கேட்டதால், எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல், என்னுடைய ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டேன். பின்பு அவருடன் பேசிய போது, அவரது குரல் என் இதயத்தை உடையச் செய்தது. கண்ணீருடன் என்னிடம் மன்னிப்பு கேட்டார். தயவு செய்து எனக்கு கிடைத்த ஆதரவை அவருக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரமாக மாற்ற வேண்டாம், ஏனென்றால் அவரது வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” என்றார்.