Skip to main content

ரூ. 15 கோடியில் புதிய பேருந்து நிலையம்; அடிக்கல் நாட்டிய அமைச்சர் 

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

 MRK Panneerselvam laid the foundation stone new bus stand at  cost  Chidambaram

 

சிதம்பரம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சிதம்பரம் - கடலூர் புறவழிச் சாலை பகுதியில் லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட நகராட்சி புல் பண்ணை இருந்த இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. பேருந்து நிலையம் அமைக்க ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  

 

இதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலைய அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். சிதம்பரம் நகராட்சி தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல்லை எடுத்து வைத்து பணிகளைத் தொடங்கி வைத்தார்.

 

இந்தப் பேருந்து நிலையம் 50 பேருந்துகள் நிற்கும் வகையிலும் 3367 சதுர மீட்டர் பரப்பளவில் 18 மாதங்களில் பணிகள் முடிக்கப்படவுள்ளன. இதில் 52 கடைகளும், ஒரு உணவகம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, போக்குவரத்து கழகங்களுக்கான தனித்தனி அறைகள், ஏடிஎம் பணம் எடுக்கும் வசதி, குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் நவீன முறையில் அமைய உள்ளது. 

 

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் உதவியாளர் ஸ்வேதா சுமன், வட்டாட்சியர் செல்வக்குமார், திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், திமுக நகர துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மூசா, நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகர் மன்ற உறுப்பினர் தஸ்லிமா, திமுக நகர் மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நகரின் முக்கிய பிரமுகர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

அமைச்சர் வரை சென்ற வீடியோ; தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநரின் லைசென்ஸ் ரத்து

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

foul language to passengers; Cancellation of license of private bus driver operator

 

கடலூரில் பயணிகளிடம் தகாதமுறையில் பேசிய தனியார் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இதில் தனியார் பேருந்துகளும் அடக்கம். இந்நிலையில், நேற்று மாலை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று விருத்தாசலம் செல்ல ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறது. அப்பொழுது பயணி ஒருவர் விருத்தாசலம் செல்லும் வழியில் உள்ள குறிஞ்சிப்பாடி நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளவா என கேட்டுள்ளார். ஆனால் விருத்தாசலம் செல்பவர்கள் மட்டுமே ஏற வேண்டும் நடுவில் நிற்காது என தெரிவித்துள்ளார் அந்த பேருந்தின் நடத்துநர். அது மட்டுமல்லாது விருத்தாசலம் இல்லாவிட்டால் பேருந்தில் ஏறக்கூடாது என தகாத முறையில் பேசினார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கண்டனத்தை பெற்றிருந்தது.

 

அங்கிருந்த பொதுமக்களும் நடத்துநரிடமும் ஓட்டுநரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கவனத்திற்கு சென்ற நிலையில், அந்த தனியார் பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் லைசென்ஸை ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கிய அமைச்சர் 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Minister MRK Panneerselvam gave education loans to students

 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகம் முன்னோடி வங்கிகளுடன் இணைந்து மாபெரும் கல்விக்கடன் முகாம் மற்றும் தொழிற்கடன் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். முகாமில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்று மாணவர்களுக்கு கல்விக்கடன் மற்றும் தொழிற்கடனை வழங்கி பேசினார். 

 

அவர் பேசுகையில், “மாணவர்கள் தங்களது உயர்கல்வி அடைவதற்கு பொருளாதாரம் ஒரு மாபெரும் தடையாக உள்ளது. அதனால் மாணவர்களின் உயர்கல்வி கனவு தடைபட வாய்ப்புள்ளது. எனவே மாணவர்கள் நலனின் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, மாணவர்களின் உயர்கல்வி கனவை நனவாக்கிட அனைத்து கல்லூரிகள் மற்றும் வங்கிகளை ஒருங்கிணைத்து இந்த மாபெரும் கல்விக்கடன் முகாம் நடத்தப்படுகின்றது. இந்த முகாமில் கலந்துகொண்டு கல்விக்கடன் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் உடனடியாக கல்விக்கடன் வழங்கிட வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

இன்றைய முகாமில் 153 மாணவர்களுக்கு ரூ.10.84 கோடி கல்விக் கடனும், பல்வேறு அரசு மானியக்கடன் திட்டங்களின் மூலம் 64 பயனாளிகளுக்கு ரூ.10:37 கோடி தொழிற்கடனும், மொத்தம் 217 பயனாளிகளுக்கு 21.21 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது” என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். முகாமில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கெளரிசங்கர் ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக்ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் ம. ராஜசேகர், அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவர் க. பழனி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்