Skip to main content

எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம்; தொல். திருமாவளவன் எம்.பி. கண்டனம்

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
  MPs suspension issue Thirumavalavan MP Condemnation

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரானது வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரின் அலுவல்கள் நேற்று (13-12-23) வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, நாடாளுமன்ற மக்களவைக்கு பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மற்றும் திருமண கொண்டாட்டங்களில் பயன்படுத்தப்படும் வண்ண புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசினர். மேலும், 'சர்வாதிகாரம் கூடாது' என அந்த இருவரும் முழக்கங்களை எழுப்பியபடி, அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோட முயன்றனர்.

அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த பாதுகாவலர்களும் அங்கிருந்த எம்பிக்களும் சுற்றி வளைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே சமயத்தில் நாடாளுமன்றத்துக்கு வெளியே இருந்த இரண்டு பெண்களும் வண்ண புகையை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் போலீசார் கைது செய்தனர். நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான நேற்று இருவர் அத்துமீறி நுழைந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சூழலில், இன்று (14-12-23) மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியது. அப்போது, மற்ற அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனவும், இந்த சம்பவம் குறித்து அமித்ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர்களுடைய கோரிக்கை இரு அவைகளிலும் ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து கூச்சல் நிலவியதால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பின்னர், 2 மணிக்குப் பிறகு இரு அவைகளும் மீண்டும் கூடின. அப்போது மக்களவையில் தமிழக எம்.பி.க்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு. வெங்கடேசன், நடராஜன் உள்ளிட்டோர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டதாகக் கூறி மக்களவை உறுப்பினர்களான கனிமொழி, மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், சுப்பராயன், ஸ்ரீகந்தன், எஸ்.ஆர். பார்த்திபன், ஜோதிமணி, ஹைபி ஈடன், டீன் குரியாகோஷ், டி.என். பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் உள்ளிட்ட 14 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 1 எம்.பி என 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனையைடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் உள்ளே இருந்து போராட்டம் நடத்தினர்.

  MPs suspension issue Thirumavalavan MP Condemnation

இந்நிலையில், 15 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தள பதிவில், “நாடாளுமன்றத்தில் கட்டுப்பாடற்ற நடத்தை என்னும் பெயரில் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஒ பிரைனும், மக்களவையைச் சார்ந்த 14 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காலை அமர்வில் ஜோதிமணி, ரம்யா, குரியாகோஸ், பிரதாபன், ஹிபி ஈடன் ஆகிய 5 உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அடுத்து பிற்பகலில் மாணிக்கம் தாகூர், கனிமொழி, பி.ஆர்.நடராஜன், வி.கே.ஸ்ரீகாந்தம், பெனி பஹான், கே.சுப்பராயன், எஸ்.ஆர். பார்த்திபன், சு.வெங்கடேசன், முகமது ஜாவேத் ஆகிய 9 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கவும் உள்துறை அமைச்சர் அது குறித்து அவையில் உரிய விளக்கமளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி குரல் எழுப்பியதற்காகத் தண்டிக்கப்பட்டுள்ளனர். சனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இடைநீக்கத்தை விலக்கி அனைவரையும் அவையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுகிறோம்” எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கட்டிலுக்கு அடியில் பதுங்கிய ரவுடிகள்; அடைக்கலம் தந்த விசிக பிரமுகர் உட்பட 6 பேர் கைது

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Rowdies lurking under the bed; 5 people arrested, including a official of vck


கும்பகோணத்தைச் சேர்ந்த விசிக கவுன்சிலர் வீட்டின் கட்டிலுக்கு அடியில் ரவுடிகள் பதுங்கி இருந்த சம்பவமும், கொடுமையான ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக விசிக பிரமுகரும் கைது செய்யப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கும்பகோணம் பேருந்து நிலையம் அருகே உள்ளது பாத்திமாபுரம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் விசிக பிரமுகரான அலெக்ஸ். இவருடைய மனைவி கும்பகோணம் மாமன்ற கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் இவர்களுடைய வீட்டில் சந்தேகப்படும் வகையில் சில நபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விசிக கவுன்சிலரின் வீட்டில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் சோதனைக்கு அலெக்ஸ் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். 'இங்கு யாரும் பதுங்கி இருக்க வில்லை' என ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனால் போலீசார் தரப்பு தாங்கள் நீதிமன்றத்தின் அனுமதிபெற்று வந்திருப்பதாகக் கூறி வீட்டின் ஒவ்வொரு அறைகளையும் சோதனையிட்டனர். அப்போது வீட்டின் பிரதான படுக்கையறையின் கட்டிலுக்கு அடியில் சிலர் பதுங்கி இருந்தது தெரியவந்தது. கிங் ஆண்டனி, அர்னால்டு ஆண்டனி, பாலுசாமி, அருண்குமார், அஜய் என்கிற நான்கு பேரையும் கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வர செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த மொத்தம் 22 கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட 5 பேரும் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. குற்றச்செயலில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக விசிக பிரமுகர் அலெக்ஸையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக விசிக பிரமுகரின் வழக்கறிஞர்கள் தரப்பு கூறுகையில், 'பாத்திமாபுரத்தில் அலெக்ஸ் வீட்டின் எதிரே உள்ள நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி வந்துள்ளார். ஏன் இவ்வாறு வேகமாக வருகிறீர்கள் என அலெக்ஸ் தரப்பினர் கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக முற்றியது. இதனடிப்படையில் அந்த நபர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் காவல்துறையினர் அலெக்ஸ் வீட்டில் சோதனை செய்துள்ளனர். போலீசார் பறிமுதல் செய்த ஆயுதங்கள் மாட்டிறைச்சி வெட்டி விற்பதற்காக வைத்திருக்கப்பட்ட கருவிகள்' என்று விளக்கம் தெரிவித்துள்ளனர்.

Next Story

“தெருவில் நடக்கும் விவாதம் போல் நாடாளுமன்றம் செயல்படக் கூடாது” - சபாநாயகர் ஓம்.பிர்லா

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Speaker Om Birla said Parliament should not act like a street debate

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில் மக்களவையின் சபாநாயகர் பதவிக்காகத் தேர்தல் நடைபெற்றதில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட ஓம் பிர்லா வெற்றி பெற்று சபாநாயகர் ஆனார். அதனையடுத்து, 18வது மக்களவையின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த அமர்வில், ஜனாதிபதிக்கு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் காரசார விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா, தனது சொந்த தொகுதியான ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு சென்றார். அங்கு சென்ற அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தீவிர சீக்கிய போதகர் அம்ரித்பால் சிங் மற்றும் பயங்கரவாத நிதியுதவி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொறியாளர் ரஷீத் சிறையில் இருந்தபோது பஞ்சாபின் கதூர் சாஹிப் மற்றும் ஜே-கேவின் பாரமுல்லாவில் இருந்து சுயேட்சைகளாக சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இரண்டு உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பதவிப்பிரமாணம் செய்திருக்கிறார்கள். மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தது ஜனநாயகம் செழிப்பாக இருப்பதைக் காட்டுகிறது. 

மக்களவையில் பலமான எதிர்க்கட்சி என்பது கட்டமைக்கப்பட்ட முறையில் மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகும். இவை சவால்கள் அல்ல, ஒரு வாய்ப்பு. வலுவான எதிர்க்கட்சி தனது கருத்துக்களை சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒப்பந்தங்களும், கருத்து வேறுபாடுகளும் ஜனநாயகத்தின் ஒரு பகுதி. பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் கருத்துக்களையும் அரசாங்கம் அறிந்து கொள்கிறது. பார்வைகள் அதிகமாக இருந்தால் நல்லது. ஆனால், நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதத்திற்கும், தெருவில் நடக்கும் விவாதங்களுக்கும் நாட்டு மக்கள் சில வித்தியாசங்களை எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறினார்.