Skip to main content

மகனின் இறுதிச்சடங்கை நேரலையில் கண்ட தாய்; புதுக்கோட்டை துயரம்

Published on 17/01/2023 | Edited on 17/01/2023

 

Mother witnesses son's funeral live; Tragedy in Pudukottai

 

சீனாவில் இறந்த தங்களது மகனின் இறுதிச்சடங்கை பெற்றோர் நேரலையில் கண்ட துயரம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகரை சேர்ந்த சையது அபுல்ஹசன் மகன் ஷேக் அப்துல்லா. 22 வயதான இவர் 2017 - 2018 ஆம் ஆண்டில் சீனாவின் மருத்துவம் பயிலச் சென்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி மருத்துவப் படிப்பு முடிந்த நிலையில், மருத்துவப் பயிற்சிக்காக சீனாவில் தங்கி இருந்தார்.

 

இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஷேக் அப்துல்லாவிற்கு கல்லீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய மாநில அரசுகளை உறவினர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். அவ்வாறு முடியாவிட்டால் அங்கேயே இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

இந்நிலையில், மாணவர் இறந்து 16 நாட்களுக்குப் பிறகு சீனாவில் மாணவர் உடலுக்கு இஸ்லாமிய முறைப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன் காட்சிகள் புதுக்கோட்டையில் இருக்கும் அவரது உறவினர்களுக்கு நேரலையில் காட்டப்பட்டது. மகனை இழந்த தாய், தந்தை மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க இறுதிச்சடங்கை பார்த்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கார்கே இது போன்ற விஷயங்களில் பொறுப்புடன் பேச வேண்டும்” - மத்திய அமைச்சர் விமர்சனம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Union Minister pralhad joshi says Kharge should speak responsibly on such matters

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது. 

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலம், சித்தோர்கார் என்ற இடத்தில் கடந்த 4ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “பிரதமர் மோடி நாட்டை பற்றி சிந்திப்பதே இல்லை. சோனியா காந்தியின் குடும்பத்தை வசைபாடுவதிலே முழு கவனத்தை செலுத்தி வருகிறார். மோடி தன்னை ‘56’ அளவு மார்பு கொண்டவன், பயப்பட மாட்டேன் என்று கூறுகிறார். நீங்கள் பயப்படாவிட்டால், சீனாவுக்கு பெரும் நிலப்பரப்பை கொடுத்தது ஏன்?. சீன ராணுவம் இந்தியாவிற்குள் ஊடுருவிய போது பிரதமர் மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா? அல்லது அவர் தூக்க மாத்திரை போட்டிருந்தாரா?” என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். 

இந்த நிலையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரில் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று (05-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரைப் பற்றி நான் இத்தகைய மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்த விரும்பவில்லை. மோடி தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் பிரபலமான பிரதமராக இருப்பதால், கார்கே எந்த வகையான மொழியைப் பயன்படுத்துகிறார் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் கார்கே, மாபெரும் கட்சியின் தேசியத் தலைவர். 

இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அவர் இது போன்ற விஷயங்களில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும். தான் என்ன பேசுகிறோம் என்று அவருக்கு தெரியவில்லை. சீனாவின் ஊடுருவல்களை நாங்கள் தடுத்துள்ளோம். 1962ஆம் ஆண்டில், 34,000 சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனா கைப்பற்றியபோது அதை ஏன் காங்கிரஸ் தடுக்கவில்லை?. சீனாவை இந்திய எல்லைக்குள் நுழைய எங்கள் அரசு அனுமதிக்கவில்லை என்று முழு நம்பிக்கையுடன் கூறுகிறோம். ஒரு அங்குல நிலம் கூட யாராலும் அபகரிக்கப்படவில்லை” என்று கூறினார்.

Next Story

“பிரதமர் மோடி சீன எல்லை பிரச்சனை குறித்து எப்போது வாய்திறப்பார்?” - கனிமொழி எம்.பி. கேள்வி

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
"When will PM Modi open his mouth on China border issue?" - Kanimozhi MP question

அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கோருவதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஆறுகள், ஊர்கள், மலைகள் என 30 இடங்களுக்கு சீன பெயர்களை, சீன அரசு சூட்டி 4 ஆவது பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 30 ஆம் தேதி சீன குடிமை விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி அருணாச்சலப் பிரதேசத்தின் திபெத்திய தன்னாட்சி பகுதியில் உள்ள 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், 4 ஆறுகள், ஒரு மலைப்பாதை மற்றும் ஒரு ஏரி என 30 இடங்களுக்கு சீன எழுத்துகளிலும், திபெத்திய மொழிகளிலும் பெயர் சூட்டப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் சீன மொழி பெயர்கள் இடம் பெற்றுள்ள சம்பவம் உலக அளவில் அதிர்வலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த 2017, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீன மொழிப் பெயர்களை சீன அரசு சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

"When will PM Modi open his mouth on China border issue?" - Kanimozhi MP question

இந்நிலையில் இது குறித்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும்,  திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, ஒன்றிய பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. தங்களின் ஆதாயத்திற்காக, நாட்டின் பாதுகாப்பை அடைமானம் வைத்துவிட்டதா பா.ஜ.க.?. தமிழ்நாட்டில் வாக்குக்காக அவதூறுகளைப் பரப்பும் பிரதமர் மோடி, சீன எல்லை பிரச்சனை குறித்து எப்போது வாய்திறப்பார்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.