Mother and children lost their life due to debt burden

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கிழக்கு காமராஜர் காலணியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (38). அங்குள்ள அரிசி ஆலை ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா (32). இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு கோகுல் ராஜ்(14) என்ற மகனும், சாய் நந்தினி(11) என்ற மகளும் உள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி கடன் சுமையாக அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் அரிசி ஆலைக்குச் சென்ற கிருஷ்ணமூர்த்தி இன்று அதிகாலை வீடு திரும்பியுள்ளார், அப்போது வீட்டின் உள்ளே மனைவி கிருத்திகா, மகன் மற்றும் மகள் மூன்று பேரும் தூக்கில் சடலமாகத் தொங்கியுள்ளனர். இதனைப் பார்த்து கிருஷ்ண மூர்த்தி கதறிதுடித்துள்ளார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூவர் உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் சுமையால் மூன்று பேரும் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.