Skip to main content

பெரிய கோவில் குடமுழுக்கு; வட்டமிட்ட கருடன்கள் - பக்தர்கள் பரவசம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
More than 25 eagle circled Kulamangalam big temple Kudamuzhuku

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் 33 அடி உயரம் கொண்ட பிரமாண்ட குதிரை சிலையுடன் எழுந்தருளியுள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இன்று காலை நடந்தது.

யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது சில கருடன்கள் வட்டமிட்டது. குடமுழுக்கு நடந்த போது சில கருடன்கள் வட்டமடித்துச் சென்றது. திரண்டிருந்த பக்தர்கள் உற்சாக குரல் எழுப்பினர். அதே போல மேக கூட்டங்களும் பஞ்சு போல திரண்டு நின்றது பக்தர்களைக் கவர்ந்திருந்தது.

More than 25 eagle circled Kulamangalam big temple Kudamuzhuku

தொடர்ந்து புனித நீர் ஊற்றப்பட்ட சிறிது நேரத்தில் 25 க்கும் மேற்பட்ட கருடன்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக வட்டமடித்ததைப் பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். எந்தக் குடமுழுக்கு விழாவிற்கும் இத்தனைக் கருடன்கள் ஒன்றாக வந்ததில்லை ஆனால் பெரிய கோயிலுக்குத்தான் இத்தனைக் கருடன்கள் ஒன்றாக வந்துள்ளது என்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

இரு தரப்பினரிடையே மோதல்; ஆடலும், பாடலும் நிகழ்ச்சியில் கத்தி குத்து!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
conflict between two parties in the Adal Padal program

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த சீதாராமன் பட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை கெங்கையம்மன் திருவிழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இரு தரப்பினரிடையே திடீரென கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறியடுத்து ஓடினர். 

இந்த மோதலில் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த சின்னராசு, குமார் மற்றும் புருஷோத்தமன் ஆகிய மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கத்தி குத்துக்கு ஆளாகி காயம் பட்டவர்களை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து  DSP ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடலும் பாடலும் நிகழ்ச்சியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

திருவிழாவில் கோஷ்டி மோதல்; ஓட ஓட விரட்டிய போலீஸ்!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
police batoned when there was a factional conflict at the temple festival

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொடமாத்தம்மன் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவின் இறுதி நாளான இன்று  ஆடலும் பாடலும் நிகழ்ச்சியைக் கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்தக் கலை நிகழ்ச்சிக்காக 20க்கும் மேற்பட்ட அதிக சத்தம் எழுப்பக் கூடிய ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஸ்பீக்கர்கள் மூலம் எழுப்பப்படும் சத்தமானது 75 டெசிபிலிக்கும் மேலாக ஒலி இருந்தது. தொடர்ந்து அதிக சத்தத்தை கேட்பதால்  செவித்திறன் பாதிக்கப்படும் அளவிற்கு இருந்தது. ஒலி மாசினால் பொதுமக்களின் செவித்திறன் பாதிக்கப்படுவதுடன் உயர் ரத்த அழுத்தம் அதிகரித்து உயிரிழப்புக்களும் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்களால் கூறப்படுகிறது.

இதற்கும் மேலாக இந்த நடன நிகழ்ச்சியின் போது ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே இருதரப்பினர் இடையே மோதல் வெடிக்கவே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதனையடுத்து உடனடியாக மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் போலீசார் சமாதானம் பேசி பிரித்து அனுப்பினர். இருப்பினும் மீண்டும் மீண்டும் சண்டை அதிகரிக்கவே போலீசார் சண்டையில் ஈடுபட்ட இளைஞரைப் பிடித்து சரமாரியாக தாக்கி துரத்தி அடித்தனர்.

இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் நடன நிகழ்ச்சியை நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்கி மீண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதுபோன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் போது அதிக திறன் கொண்ட ஸ்பீக்கர்கள் அமைப்பதினால் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பாடும். எனவே இனி வரும் காலங்களிலாவது இதற்கான கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பதே பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்பாகவே உள்ளது.