Skip to main content

 பணமில்லாததால் ஆத்திரம்; ஏ.டி.எம். இயந்திரத்தை நொறுக்கிய வாலிபர்!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Moneyless rage. ATM The boy who smashed the machine!

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளம் பஜாரில் தேசிய மயமாக்கப்பட்ட முன்னணி வங்கி ஒன்றின் ஏ.டி.எம். ஒன்று உள்ளது. அந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் எப்போதும் பணம் குறைவாகவே வைப்பதால் அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பணமெடுக்கச் செல்லும்போதெல்லாம் பணமில்லாமல் திரும்பியுள்ளனர்.

 

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் தெரிவித்துள்ளனர். இதனிடையே நேற்றைய தினம் அந்த ஏ.டி.எம்-மிற்கு பணம் எடுக்க வந்த வாலிபர் ஒருவர் ஏ.டி.எம். எந்திரத்தில் பணமில்லாததால் அவரால் பணம் எடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் வெளியே இருந்த கல்லை எடுத்து வந்து ஏ.டி.எம். திரையின் கண்ணாடியை அடித்துச் சேதப்படுத்தியுள்ளார். இதையறிந்த வங்கி நிர்வாகத்தினர், அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரத்துடன் கொண்டு சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

 

இது குறித்து நாம் பேய்க்குளம் நகரின் சமூக ஆர்வலர்களிடம் கேட்ட போது, "இங்கே அந்த ஏ.டி.எம். ஒன்றுதான் உள்ளது அக்கம் பக்க கிராமத்தவர்கள் பணமெடுப்பதற்காக இதைத்தான் பயன்படுத்துகிறார்கள். வாடிக்கையாளர்கள் அதிகமிருப்பதாலும். அதில் போதிய அளவு பணம் வைக்காமல் போனதாலும் பணமெடுக்கமுடியாமல் திரும்ப வேண்டிய சூழல். ஆனால் வங்கி நிர்வாகமோ நகரங்களைப் போல் இல்லாமல் கிராமப்புற ஏ.டி.எம்.களில் விதிப்படி பாதுகாப்பு கருதி ஓரளவுதான் வைக்கமுடியும்.  எனவே, இதற்கு வங்கி நிர்வாகம் தான் ஒரு தீர்வு காண வேண்டும்" என்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கி மேலாளரைத் தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி; வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP Administrator vs bank manager Shocked when the video was released

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான  ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று (13.03.2024) பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் பிரதீப், “ஏ.டி.எம். மையத்தில் சர்வீஸ் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் பணம் எடுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அபிலாஷ் மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து வங்கியின் மேலாளர் பிரதீப் மணவாளநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபிலாஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் அபிலாஷை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிலாஷ் வங்கியின் மேலாளர் பிரதீப்பை கொடூரமாகத் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Satankulam father, son case; Inspector dismisses bail plea

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.