Skip to main content

பண மோசடி: தீவிர விசாரணையில் குற்றப்பிரிவு துறையினர்!  

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

Money Laundering: Criminal Investigation Department in Serious Investigation

 

திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் sparrow global trade என்ற நிறுவனத்தை பாபு, அறிவுமணி, பால்ராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து கூட்டாக நடத்தி வருகின்றனர். இவர்களுடைய நண்பரான முத்துராஜா என்பவர் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த தன்னுடைய நண்பரான பார்த்திபனை இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

 

அவர் 5 கோடியே 44 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் முதலீடு செய்த தன்னுடைய பணத்தை திருப்பி கொடுக்க அந்நிறுவனத்தின் உரிமையாளர்களிடம் கேட்டுள்ளார். பணத்தை திருப்பித் தராததால் தன்னுடைய நண்பரான முத்துராஜா மூலம் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு துறையினர் பாபு, அறிவுமணி, பால்ராஜ் ஆகிய உரிமையாளர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்