H.Raja-_Stalin_1_12213

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்வானார் என பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

Advertisment

இதைத்தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தை திருடர்களிடம் இருந்து மீட்பதுதான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும். திமுக தொண்டர்களின் ஒத்துழைப்புடன் மோடி அரசை அகற்றுவோம். இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மோடி அரசுக்கு பாடம் புகட்டுவோம் என அவர் சூளரை ஏற்றார்.

Advertisment

இந்நிலையில் பாஜக தேசியசெயலாளர் எச்.ராஜா தனது டிவிட்டரில்,

திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சவாலை ஏற்க்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் காண்போம் என்றார்.

Advertisment

இதேபோல் மேலும் ஒரு பதிவில், காவிகளின் சக்தியை காட்ட 2.9.18 வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள திரண்டு வாருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.