Skip to main content

பொம்மன் பெள்ளியை நேரில் சந்திக்கும் மோடி; புதுப்பொலிவு பெரும் தெப்பக்காடு

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். குறிப்பாக சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை மற்றும் தாம்பரம்-செங்கோட்டை ரயில் சேவை ஆகியவற்றை தொடங்கி வைக்க இருக்கிறார்.

 

அதனைத் தொடர்ந்து 8 ஆம் தேதி முதுமலை தெப்பக்காடு பகுதிக்குச் செல்ல இருக்கிறார். இதனால் நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி செல்லும் பிரதமர்  'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தின் மூலம் ஆஸ்கார் விருது பெற்ற பொம்மன்-பெள்ளி தம்பதியை நேரில் சந்திப்பதோடு ஆவணப்படத்தில் இடம்பெற்ற யானைகளையும் நேரில் பார்வையிட இருக்கிறார்.

 

மைசூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 9 மணிக்கு மசினகுடிக்கு வருகை தரும் பிரதமர், சாலை மார்க்கமாக தெப்பக்காடு செல்கிறார். இதனால் அந்த பகுதியில் நாளை முதல் வரும் 9 ஆம் தேதி வரை ரிசர்ட்டுகள், உணவு விடுதிகள், சிற்றுண்டி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் வருகை காரணமாக அங்கிருக்கும் அரசு அலுவலகங்கள் வண்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வன விலங்குகளை காண்பதற்கான வாகன சவாரியும் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், துப்புரவு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்வார்” - ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

jairam ramesh Review Prime Minister will go to any extent to save his image

 

பத்து ஆண்டு கால ஆட்சியில், மலிவான வகையில் சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் மோடியின் தந்திரங்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். 

 

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பின்னணியில் வைத்து செல்பி பாயிண்ட்ஸ் அமைக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு கேட்டு கொண்டுள்ளது.

 

பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளதை தொடர்ந்து நமது பிரதமர் மோடி மிகவும் பாதுகாப்பற்ற மனநிலையில் இருக்கிறார். தனது இமேஜை காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார். முதலில் ராணுவத்தில் செல்பி பாயிண்ட்ஸ் அமைக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார். அதன் பிறகு, மூத்த அதிகாரிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை ரத யாத்திரை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். 

 

தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலம் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்கு செல்பி பாயிண்ட்ஸ் அமைக்குமாறு கூறியுள்ளார். இதற்கு முன்பு சந்திரயான் 3 நிலவில் இறங்கியபோது நேரலையில் தோன்றி அந்த நிகழ்ச்சி முழுவதையும் ஆக்கிரமிக்க முயற்சித்தார். அதற்கு முன்பு, கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களிலும் தனது படத்தை அச்சிட்டு வழங்கினார். இவையெல்லாம் பிரதமர் மோடியின் பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் அறுவறுப்பான பண்புகளுக்கு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இந்த பத்து ஆண்டு கால ஆட்சியில், மலிவான வகையில் சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் மோடியின் தந்திரங்களால் மக்கள் சோர்வடைந்துள்ளனர். வடகொரியா சர்வாதிகாரிகளைப் போன்ற நிலையை பிரதமர் மோடி எட்டியுள்ளார். இதற்கு தகுந்த பதிலை மக்கள் கூடிய விரைவில் பிரதமர் மோடிக்கு தருவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கொடநாடு வழக்கு தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Koda Nadu case report handed over to the court

 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றிருந்தது. இதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

 

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கு சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் ஆகியோரிடம் இருந்து 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகள் கடந்த 2017 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

 

அதனைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகளை ஆய்வு செய்ய கடந்த ஜூன் மாதம் சிபிசிஐடி போலீசார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கோவையில் உள்ள தொழில்நுட்ப ஆய்வகத்திற்கு பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகள் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில் ஆய்வின் முடிவில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் அறிக்கையாக மூடி முத்திரையிடப்பட்ட உறையில் உதகை மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்