Modi will come to Tuticorin soon

Advertisment

விரைவில் பிரதமர் மோடி தமிழகத்தின் தூத்துக்குடி பகுதிக்கு வர இருக்கும் நிலையில், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பார்வையிட்டனர்.

வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 28 ஆம் தேதி தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காகப் பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர் .

விழா நடைபெறும் இடம், ஹெலிகாப்டர் இறங்கும் தளம், பந்தல் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து இன்று துறைமுக அதிகாரிகளிடமும் சேர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டது. தூத்துக்குடியில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.