சசிகலாவின் அக்காள் மகனும், டி.டி.வி. தினகரனின் தம்பியுமான டி.டி.வி. பாஸ்கரன் சனிக்கிழமை புதிய கட்சியை தொடங்கினார். அண்ணா எம்.ஜி.ஆர். மக்கள் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்து, மேலே காவி, நடுவில் பச்சை, கீழே கருப்பு வண்ணத்தில், நடுவில் எம்.ஜி.ஆர். படம் இருப்பதைப்போன்று கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பொதுச்செயலாளராக உள்ளார் பாஸ்கரன்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரன், எம்ஜிஆர் அண்ணா வழியில் ஊழலற்ற நிர்வாகத்தை தரவே கட்சி ஆரம்பித்துள்ளேன். எம்ஜிஆர் தொண்டர்களை ஒருங்கிணைத்து வழிநடத்தவே எனது இயக்கத்தை கட்சியாக அறிவித்துள்ளேன்.
மீண்டும் மோடியை பிரதமராக்கப் பாடுபடுவேன். ஊழலற்ற இந்தியாவின் இறையான்மையை காக்கும் மோடிக்கு எனது முழு ஆதரவு. 15 வருடம் குஜராத்தில் முதல்வராகவும், 4 வருடம் இந்திய பிரதமராக இருக்கும் மோடி மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்று அவர் கூறினார்.