இன்று கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைஅடிக்கல் நாட்டி தொடங்கிவைத்து பேசினார்.
அவர் பேசியதாவது,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
புல்வாமா தாக்குதலுக்கு பிறகுதுணிச்சலான நடவடிக்கை எடுத்தராணுவத்தினருக்கு நமதுவணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். இது புது இந்தியா எனவே பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும். அண்மை நிகழ்வுகள் ராணுவத்தின் வலிமையை எடுத்துக்காட்டி வருகிறது. சிலர் மோடி மீதான வெறுப்பை நாட்டிற்கு எதிரான வெறுப்பாக கட்டுகிறார்கள். ஆனால் உலகமே பயங்கரவாதத்திற்கு எதிரான நமது யுத்தத்தை பாராட்டி வருகிறது. அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது பெருமைக்குரியது.
ஒருகாலத்திலே அக்டோபர் 26ல் பயங்கரவாத தாக்குதல்கள் நடந்ததை நீங்கள் செய்திகளில் படித்திருப்பீர்கள். அன்றுநமது விமானப்படை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்த விரும்பியது. ஆனால் அன்றைய அரசு விடவில்லை. ஆனால் இன்று விமானப்படைக்கு முழுசுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது புதிய இந்தியா. இங்கு பயங்கரவாதிகளால் நடக்கும் பாதிப்பு வட்டியும் முதலுமாக திருப்பிக்கொடுக்கப்படும்.
எனது குடும்பம் இந்த 130 கோடி மக்களும் தான். நான் அவர்களுக்காவே வாழ்வேன். அவர்களுக்காவே வீழ்வேன். நான் பொதுவாழ்வில் இருப்பது எந்த குடும்ப அரசியலையும் கொண்டுவர அல்ல.நாட்டின் வளர்ச்சிக்காக என்னவேண்டுமானாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்.