பிரதமர் மோடி வரும் மே 26-ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி வரும் மே 26ஆம் தேதிதமிழகம் வர இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அண்மையில் புதுச்சேரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்து பின்னர் இங்கிருந்து புதுச்சேரி சென்றிருந்தார். ஏற்கனவே பாஜக சார்பில் நடத்தப்பட இருந்த பொங்கல் விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடி தமிழகம் வருவதாக இருந்த நிலையில், கரோனாபரவல், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் அவரது தமிழக வருகை ரத்தானது குறிப்பிடத்தக்கது.