சிதம்பரம் சட்டமன்றத் தொகுதி கிள்ளை பேரூராட்சியில் கரோனா நோய்த் தடுப்பு பணிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் கிள்ளை ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 70 நபர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் வழங்கினார்.
இந்நிகழ்வில் அண்ணாமலைப் பல்கலைக் கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கானூர் பாலசுந்தரம், மாவட்டக் கழக துணைச் செயலாளர் தேன்மொழி காத்தவராயசாமி, கிளைக் கழக நிர்வாகிகள் தமிழ்மணி, தமிழரசன், ஜவகர், பொன்னுசாமி, சிவா, சிவகுமார், பேரூராட்சி உதவியாளர் செல்வம், கிள்ளை ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர் பாலாஜி காவல்துறையினர் கலந்துகொண்டனர்.