Skip to main content

'திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது'-பாடலை குறிப்பிட்டுகாட்டி முதல்வர் பேச்சு! 

Published on 11/08/2022 | Edited on 11/08/2022

 

 

சென்னை கலைவாணர் அரங்கில் போதைப் பொருட்கள் தடுப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசிவருகிறார்.

 

அவர் உரையானது, '' திமுக ஆட்சி அமைந்தது முதல் 41,625 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 50 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் போதைப்பொருட்கள் நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. எப்படியாவது பெற்று விடுகிறார்கள். போதைப் பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் போதைப் பொருட்களுக்கு எதிராக செயல்பட்டால்தான் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். போதைப் பொருள் ஒருவரிடத்தில் இருந்து மற்றொரு நபருக்கு போகும் சங்கிலியை நாம் உடைத்தாக வேண்டும்.  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருடாதே என்ற படத்தில் பாடல் ஒன்றை எழுதினார். ரொம்ப பேமஸான பாட்டு 'திட்டம்போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது; அத சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது; திருடராய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்று எழுதினார். எந்த குற்றமாக இருந்தாலும் சட்டத்தின் பங்கு பாதிதான். குற்றவாளிகளின் மனமாற்றம் அதில் பாதி அளவு இருக்க வேண்டும். போதை பாதை என்றுமே அழிவுப்பாதை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்