விழுப்புரம் மாவட்டம் வானூரில் கட்டப்பட்ட புதிய சமத்துவபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள கொழுவேரி என்ற இடத்தில் கட்டப்பட்ட 100 சமத்துவபுர குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார். ரூ.2 கோடியே 88 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்புகளைத் திறந்து வைத்த முதல்வர், அதன் சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார். கலைஞர் பூங்கா, விளையாட்டு அரங்கு, ரேஷன் கடைகள் என சகல வசதியுடன் இந்த சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. பின், அங்கு அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு அரங்கில் முதல்வர் ஸ்டாலின் வாலிபால் போட்டியைத் துவக்கி வைத்தார்.
இது தமிழகத்தில் பத்தாண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் சமத்துவபுரம் என்பது குறிப்பிடத்தக்கது.