Skip to main content

“பெற்றவர்கள் வயிறு‌ எரிகிறது...” தமிழக அரசை கடுமையாக சாடிய ராஜேஸ்வரி பிரியா !

Published on 24/03/2022 | Edited on 24/03/2022

 

“Is the MK Stalin going to give advice to the viral video students? Are you going to appreciate it? ” - Rajeswaripriya

 

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்கழுக்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான மாணவ மாணவிகள் பயன்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தினமும் பேருந்துகளில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பள்ளியில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மாணவிகள், பேருந்தில் பயணிக்கும் போதே, பேருந்துக்குள் மது அருந்தி அட்டகாசம் செய்தபடி சென்றுள்ளனர். இதனை அப்பேருந்து நடத்துநரும், ஓட்டுநரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும், இவர்களின் இந்த வரம்பு மீறிய செயலை பேருந்தில் பயணித்த ஒருவர் தனது கைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. 

 

மேலும், மாணவர்களின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு அரசு முறையாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

அதில் அவர், “நேற்று பார்த்து அதிர்ந்த செய்தி. செங்கல்பட்டு மாவட்டத்தில் பீர் குடித்துக் கொண்டே மாணவ மாணவிகள் அரசு பேருந்தில் பயணம் செய்கிறார்கள். அரசே மதுக்கடைகளை நடத்துவதால் மாணவ மாணவிகள் அரசிற்கு வருவாய் ஏற்படுத்துகிறார்கள் என்று நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டுமா?. பெற்றவர்கள் வயிறு‌ எரிகிறது. 

 

“Is the MK Stalin going to give advice to the viral video students? Are you going to appreciate it? ” - Rajeswaripriya

 

ரூ 40,500 கோடி வருமானம் ஈட்ட வேண்டும் என்ற இலக்கை நோக்கி ஓடும் அரசிற்கு டாஸ்மாக் வருமானம் அதிகமாவது மகிழ்ச்சியான‌ செய்தியே.

 

அதிமுக ஆட்சியின் போது மது விலக்கு அமல்படுத்தபட்டால் தாங்கள் நடத்தும் மது ஆலைகளை மூடத் தயார் என்று பேசினார் கனிமொழி. தற்போது தங்களது ஆட்சி நடக்கிறது. ஆனால், நீங்கள் மது குறித்து வாயே திறக்காமல் மௌனம் காத்து வருகிறீர்கள். இப்படி ஒரு அரசியல் தேவையா? முதல்வர் ஸ்டாலின் கருப்பு சட்டை அணிந்து போராடினார். உங்கள் பேச்சு மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்கானது  மட்டுமே தவிர உண்மையானது அல்ல.

 

அரசு நடத்தும் போதை மறுவாழ்வு மையங்கள் மூன்று மட்டுமே. ஆனால் டாஸ்மாக் கடைகள் 5300க்கும் அதிகம். மக்களின் கல்லீரலை அழுக வைத்து கஜானாவை நிரப்ப வேண்டுமா? வேதனை.

 

வைரல் வீடியோவை பார்த்தால் மாணவர்களை உடனே அழைத்து பாராட்டும் முதல்வர், பேருந்தில் பீர் குடித்து கொண்டே பயணம் செய்த மாணவ மாணவியர்களை அழைத்து அறிவுரை கூறப் போகிறீர்களா? அல்லது அரசிற்கு வருவாயை பெருக்குகிறீர்கள் என்று பாராட்ட போகிறீர்களா? 

 

21 வயதிற்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்ற விதி கூட செயல்படுத்தப்படுவதில்லை. மாறவேண்டியது மக்கள் தான். நம் அடுத்த தலைமுறையை காக்க நாம் எல்லோரும் சிந்திக்க தொடங்க வேண்டும். அதேசமயம், பள்ளிச் சீருடையிலோ, 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களோ மது வாங்க வந்தால், அவர்களுக்கு மது விற்கும் மதுக் கடை ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமை ஆசிரியரின் கீழ்த்தரமான செயல்! ஆவேசமான பெற்றோர்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
POCSO Case register on government school teacher

ஓமலூர் அருகே, சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியரை பணியிடைநீக்கம் செய்து, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மண்கூடல் ஊராட்சிக்கு உட்பட்ட, கந்தம்பிச்சனூரில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 128 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். வாழப்பாடி அருகே உள்ள சோமம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சில மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் கிளம்பின. 

இதையறிந்த பெற்றோர்கள் திரண்டு சென்று மார்ச் 11ஆம் தேதி காலை, பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியை இழுத்து மூடி பூட்டு போட்டு, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திடீரென்று மக்கள் திரண்டு வந்து மறியலில் இறங்கியதால் அந்தப் பகுதியே களேபரமாக மாறியது. இந்நிலையில், தகவல் அறிந்த தாரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சேலம் மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஊழியர்களும் சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரிடம் பேசினர். 

அப்போது அவர்கள், தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை உடனடியாக பணியிடைநீக்கம் மற்றும் கைது செய்யும்படி ஆவேசமாக கூறினர். மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தகவலை முன்பே அறிந்து இருந்தும் அதை தெரியப்படுத்தாமல் மூடி மறைத்த ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கோரினர். பள்ளியில் அனைத்து வகுப்பு அறைகளிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தவும் கோரிக்கை விடுத்தனர். 

பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும், நிகழ்விடத்திலேயே தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணனை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் சந்தோஷ் உத்தரவிட்டார். இதையடுத்து பெற்றோர்கள், போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே, ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ராதாகிருஷ்ணன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பள்ளி மீதான இதர புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தலைமை ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தால் கே.ஆர்.தோப்பூர் - முத்துநாயக்கன்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Next Story

படியில் தொங்கியபடி பயணம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Travel hanging on a step; 3 college students were loss their live

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் காமேஷ், மோனிஷ், தனுஷ் ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களும் பிரேப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.