Skip to main content

அதிகாரிகள் பயன்பாட்டிற்கு மின் வாகனங்கள் - முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைப்பு 

Published on 04/06/2022 | Edited on 04/06/2022

 

mk stalin flag electric Vehicles for Use of Officers

 

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ள 25 மின் வாகனங்களை தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். 

 

அதனைத் தொடர்ந்து,  உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பில் பசுமை விருதுகள், ஐந்து தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர்கள் விருதும் வழங்கப்பட உள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இரா.சம்பந்தன் மறைவு - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
r Sampanthan passed away Chief Minister MK Stalin obituary

இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி.யுமான இரா.சம்பந்தன் (வயது 91) காலமானார். உடல்நலக்குறைவால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்படிருந்த நிலையில் இரா.சம்பந்தன் உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் மரியாதையைப் பெற்ற அரும்பெரும் தலைவராகத் திகழ்ந்தவர் சம்பந்தன். இறுதிமூச்சு வரையிலும் தமிழ்மக்களின் நலனுக்காகவே சிந்தித்தார். செயல்பட்டார். நாடாளுமன்றவாதியாக அரைநூற்றாண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இலங்கையின் அரசியலில் பாரதூரமான தாக்கத்தைச் செலுத்தி வந்தன. இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக மிக நீண்டகாலம் அறவழியில் சம்பந்தன் போராடி வந்தார். இந்தியாவோடும் தமிழ்நாட்டுடனும் மிகச் சிறந்த நட்புறவை சம்பந்தன் அவர்கள் பேணி வந்தார். கலைஞரின் நண்பராகவும், இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் பல முறை அவரைச் சந்தித்து மிகவும் முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து சம்பந்தன் ஆலோசித்துள்ளார். 

r Sampanthan passed away Chief Minister MK Stalin obituary

2015ஆம் ஆண்டில் சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ‘எனது அருமை நண்பர் நாவலர் அமிர்தலிங்கத்திற்குப் பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது. இலங்கைத் தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவுகாலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர்நோக்கியிருக்கும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் நம்பிக்கையைத் தருகிறது’ என்று கலைஞர் வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2016ஆம் ஆண்டு 13ஆவது முறையாகத் கலைஞர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பந்தனும், ‘இதுவொரு சாதாரண சாதனையல்ல. எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனையாகும். இலங்கைத் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வைப் பெறுவதற்கு உங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பு தொடர வேண்டும்’ என வாழ்த்து தெரிவித்திருந்தார். ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்குப் பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தனின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது. அவரது மறைவு இலங்கைத் தமிழ் மக்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கும் பேரிழப்பாகும். 

r Sampanthan passed away Chief Minister MK Stalin obituary

இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தனை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கைத் தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்” - இ.பி.எஸ். வலியுறுத்தல்!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Chief minister should resign EPS Emphasis

முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 5 பேர் சிகிச்சை பெற்றுவருவதாகச் செய்திகள் வந்த நிலையில், அதனைத் திருப்பூர் மாவட்ட காவல்துறை மறுத்து செய்தி வெளியிட்டது. ஆனால், தற்போது மாவடப்பு மலைக்கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் மதுவுடன் கள்ளச்சாராயம் கலந்து அருந்தியதால் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதிலும் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்க, அதிலிருந்து இந்த திமுக அரசு எந்த பாடமும் கற்றுக்கொள்ளாமல், மீண்டும் மீண்டும் மூடி மறைக்க முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஒவ்வொரு முறையும் கள்ளச்சாராய மரணங்கள் நிகழும் போது ‘இனி இதுபோல் நடக்காது’ என்று முதல்வர் சொல்வதும், மீண்டும் கள்ளச்சாராயத்தால் மக்கள் பாதிக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில், இனியும் மு.க. ஸ்டாலின் முதல்வராகத் தொடர்வதில் எந்த தார்மீக அடிப்படையும் இல்லை. தமிழ்நாட்டில் நிலவும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கும் இதனால் சீரழியும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் முழு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.