Skip to main content

தமிழக அரசின் முடிவுக்கு வரவேற்பு: திமுகவின் அனைத்துக்கட்சி கூட்டம் ரத்து!

Published on 19/02/2018 | Edited on 19/02/2018
stalin


காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வரும் 22ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. இதனால் திமுக சார்பில் வரும் 23ஆம் தேதி நடைபெறுவிருந்த அனைத்துக் கட்சி கூட்டத்தை ரத்து செய்தார் அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்.

காவிரி விவகாரத்தில் திமுக சார்பில் வரும் 23ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அதிமுக, பாஜக உள்ளிட்ட ஆளும் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதேபோல், இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் புதிய அரசியல் கட்சி துவங்கவிருக்கிற நடிகர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை, உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் 22-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 1.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பையடுத்து, திமுகவின் அனைத்துக் கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அரசின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்று ஆக்கப்பூர்வமான ஆலோசனை தெரிவிக்கும். காவிரி நீருக்கான முதல்வர் தலைமையில் 22ல் நடக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு திமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு விவசாய சங்க பிரதிநிதிகளையும் முதல்வர் அழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சார்ந்த செய்திகள்