Skip to main content
Breaking

நக்கீரன் செய்தி எதிரொலி; ரூ1.15 கோடியில் புதிய சாலை அமைப்பு

Published on 05/09/2023 | Edited on 05/09/2023

 

 Mithigudi road was constructed of Rs 1.15 crore by nakkheeran news

 

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கதிர்வேல் நகரிலிருந்து மீதிகுடி கிராமம்வரை 1800 மீட்டர் சாலை மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது. இதனால் மீதிகுடி, கோவிலாம்பூண்டி, முத்தையாநகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதுகுறித்து கடந்த 3  மாதத்திற்கு முன்பு நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். 

 

இதனைத் தொடர்ந்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாதர் சங்க மாவட்டத்தலைவர் மல்லிகா, நகரத்தலைவர் அமுதா, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கஜேந்திரன் உள்ளிட்ட கொத்தங்குடி ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் ஒருங்கிணைந்து இதனைக் கொத்தங்குடி ஊராட்சி குடியிருப்போர் நல கூட்டமைப்பு  ஏற்படுத்தி  புதிய சாலை அமைக்க வேண்டும் எனப் போராட்டத்தை அறிவித்தனர்.

 

இதனையறிந்த பரங்கிப்பேட்டை ஒன்றியப் பெருந்தலைவர் கருணாநிதி தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. அதில் உடனடியாகச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் தொடர்ச்சியாக முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ 1 கோடியே 15 லட்சம் செலவில் கதிர்வேல் நகரிலிருந்து மீதி குடி கிராமம்வரை 1800 மீட்டர் நீளத்திற்கு புதிய தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். மேலும், உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சேறும், சகதியுமான சாலை; சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராட்டம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

People struggle to repair the mud and muddy road

 

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர், கே.கே. நகர், பனந்தோப்பு ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாநகரில் உள்ள இந்த குடியிருப்புப் பகுதியில் தெரு விளக்கு, சாலை வசதி, மழைநீா் வடிகால் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், இதுதொடா்பாக பலமுறை வார்டு கவுன்சிலர்களுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையருக்கும் இப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் குடியிருப்புக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் சேறும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் மாறி ஆங்காங்கே குளம் போல் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதும், நடந்து செல்லும் பலரும் சாலையில் வழுக்கி விழுந்து காயமடைவதும் எனத் தொடர்கதையாக ஆகிறது.

 

இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள், ஆண்கள் என 30க்கும் மேற்பட்டவர்கள் முக்கிய சாலையில் சேறும் சகதியுமான இடத்தில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைந்து சாலை அமைத்துத் தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

பாறையால் சவாலாகும் மீட்புப் பணி; 36 பேரின் நிலை என்ன?

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

Rescue work challenged by rocks; what is the status of 36 people?

 

உத்தரகாண்ட் சுரங்க விபத்து குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்கியான என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக சுரங்கப் பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி பணியில் இருந்த 36 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து நிகழ்ந்துள்ளது. மீட்புப் பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. விசாரணைக்குப் பின் இந்தக் குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் எதிர்காலத்தில் சுரங்கப் பாதை பணிகளை மேற்கொள்வதில் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் உணவு செலுத்தப்பட்டு வரும் நிலையில், 200 மீட்டர் பரப்பளவில் உள்ள பாறையை அகற்றும் பணி சவாலாக இருப்பதாக மீட்புக்குழு தெரிவித்துள்ளது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்