Skip to main content

“மிஸ் எல்லார் முன்னாடியும் திட்டினாங்க, ஃப்ராடு பண்றியானு கேட்டாங்க” - மாடியிலிருந்து விழுந்த மாணவி வாக்குமூலம்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

“Miss, everyone scolded before; Fraud student asked" - confession of the student who fell from the floor

 

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி நேற்று முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தார். 

 

கரூர் மாவட்டம், லாலாப்பேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கள்ளப்பள்ளியைச் சேர்ந்த செந்தில்குமாரின் 15 வயது மகள் அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் பெற்றோருடன் செந்தில்குமாரின் மகளும் கலந்து கொண்டார்.

 

நிகழ்ச்சி முடிந்ததும் பள்ளியில் சகதோழிகளுடன் பேசிக்கொண்டு இருந்த மாணவி யாரும் எதிர்பாராத நிலையில் பள்ளியின் முதல்மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். உடனிருந்த மாணவிகள் ஆசிரியர்களிடம் கூற அவர்கள் மாணவியை மீட்டு திருச்சி மருத்துவமனையில் சேர்த்தனர். முதுகில் பலத்த அடி பட்டுள்ளது மருத்துவர்களின் சோதனையில் தெரியவந்தது. தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மாணவி விழுந்த இடத்தில் சோதனை நடத்தினர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தினர்.

 

இந்நிலையில், மாணவி பேசும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில், “கலைநிகழ்ச்சிக்கு எல்லாரும் போன் கொண்டு வந்து வீடியோ எடுத்தாங்க. என்கிட்ட ஒரு அக்கா போன் கொடுத்து வீடியோ எடுக்கச் சொன்னாங்க. நான் எடுக்க மாட்டேன்னு சொன்னேன். திரும்பவும் கொடுத்து அந்த அக்காகிட்ட கொடுனு சொன்னாங்க. நான் வாங்கிக் கொடுத்தேன். இதைப் பார்த்த மிஸ் திட்டிட்டாங்க. எல்லார் முன்னாடியும் திட்டிட்டாங்க. எல்லாரும் பாத்தாங்க. யாரும் என்கிட்ட பேசமாட்டாங்க. டீச்சர்ஸ் எல்லாம் என்ன ஒதுக்கி வைப்பாங்கனு பயந்து தான் மேல இருந்து கீழ குதிச்சிட்டேன்.” என்று கூறினார்.

 

வீடியோ எடுப்பவர் என்ன சொல்லி திட்டினாங்க என்று கேட்டதற்கு மாணவி, “நீ எதுக்கு இப்படி எல்லாம் பண்ற. ஃப்ராடு பண்றியா. பொய் பேசுறவங்கள எனக்கு சுத்தமா பிடிக்காது. உண்மைய சொல்லு. உன்மேல தான் தப்பு இருக்கு. நீ எதுக்கு போன் வாங்கி கொடுத்த”னு சொன்னாங்க. மிஸ், அந்த அக்கா கொடுக்க சொன்னதால தான் கொடுத்தேன்னு சொன்னேன். அதுக்கு மிஸ் முப்பதாயிரம் போன யாருன்னே தெரியாதவங்க, உன்கிட்ட கொடுப்பாங்களா. பொய் சொல்லாதனு சொன்னாங்க” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.