Skip to main content

உடலை டோலி கட்டி தூக்கிச் செல்லும் அவலம்; எப்போது கிடைக்கும் தீர்வு

Published on 24/06/2023 | Edited on 24/06/2023

 

The misery of carrying the body with a dolly

 

திருவண்ணாமலை மாவட்டம் மலைக் கிராமம் ஒன்றில் சரியான சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவர்களின் உடலை டோலி கட்டித் தூக்கிச் செல்லும் அவலம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது.

 

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் மலைப் பகுதியில் வாழும் கிராம மக்களுக்கு சரியான சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைகளில் உயிரிழப்பவர்களின் உடல்களை டோலி கட்டித் தூக்கிச் செல்லப்படும் அவலம் நீடித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு எலந்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் டோலி கட்டித் தூக்கிச் செல்லப்பட்டது தொடர்பான செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதே மலைப் பகுதியில் சீங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமராஜன் என்பவரின் மனைவி சுசீலா என்பவர் மஞ்சள் காமாலை நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் சாலை வசதி இல்லாததால் மலையடிவாரத்திலேயே நிற்க, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் டோலி கட்டி உடலைத் தூக்கிச் சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கேள்விக்குறியாகும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு? - கண்டுகொள்ளாத அதிகாரிகள்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Drivers are at risk of getting into an accident due to cattle lying on  road

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் கால்நடை வைத்திருப்பவர்கள் காலையில் அவைகளை அவிழ்த்து விட்டுவிடுகின்றனர். இது காய்கறி கடைகள், பூக்கடைகள் உட்பட எல்லா இடங்களிலும் பொருட்களை சாப்பிடுகின்றன. மதிய நேரத்தில் அதன் உரிமையாளர்கள் வந்து பால் கறக்கும் மாடுகளில் சாலையிலேயே அமர்ந்து பால் கறந்துக்கொண்டு மீண்டும் அங்கேயே விட்டுவிடுகின்றனர். 

சாலையில் சுற்றி திரியும் இந்த கால்நடைகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வி.கோட்டா, பேரணாம்பட்டு சாலையில் கால்நடைகள் சாலையிலே ஹாயாக படுத்து உறங்கிக் கொண்டிருக்கின்றன. வெளியூர் வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய  வாகனங்கள் கால்நடைகள் மீது மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. இருசக்கர வாகனங்கள் மாடுகள் மீது மோதி பலர் கீழே விழுந்து கை, கால்களில் சிராய்ப்பு, என பல பாதிப்புகளுக்குள்ளாகின்றனர். இதுக்குறித்து நகராட்சிக்கு, காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பலமுறை தகவல் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையாம். இது பொதுமக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Drivers are at risk of getting into an accident due to cattle lying on  road

பெரியதாக உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் கால்நடைகள் சாலைக்கு வராமல் தடுத்து நடவடிக்கை எடுக்கும்படி பேரணாம்பட்டு பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு கோரிக்கை வைக்கின்றனர். கால்நடைகளை சாலையில் ஓட்டி விடும்  உரிமையாளர்களுக்கு அபராதமும் மீண்டும் மீண்டும் அப்படி செய்தால் மாடுகள் பிடித்து வைத்து நகராட்சி ஏலம் விடப்படும் என்கிற விதிகள் இருந்தாலும் நகராட்சி அலுவலர்கள் இதை நடைமுறைப்படுத்துவதில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் வாகன ஓட்டிகள்.

Next Story

வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடி சோதனை; லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Tahsildar arrested for taking bribe

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்கா நல்லூர் கிராமம் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தன்னுடைய தாயார் கண்ணம்மாள் பெயரில் சொத்து மதிப்பு சான்று பெற்று அரசு ஒப்பந்த டெண்டர்களை எடுத்து செய்து வருகிறார்.

இவர் சொத்து மதிப்பு சான்று பெற ரூபாய் 20 லட்சத்திற்கு அரசிற்கு செலுத்த வேண்டிய 7900 ரூபாய் வங்கியின் மூலமாய் காசோலை எடுத்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மற்றும் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியரின் பரிந்துரை பெற்று கடந்த 13.6.2024 ஆம் தேதி ஆரணி வட்டாட்சியர் மஞ்சுளா அணுகி தந்துள்ளார்.

அவர் ரூ.20 லட்சம் சொத்து மதிப்பீடு சான்று பெற இரண்டு சதவிதம் ரூ,20,000 லஞ்சமாக கேட்டு உள்ளார். பின்னர் அவரிடம் அவ்வளவு தொகை இல்லை என்று சொல்லவே குறைந்தது ரூபாய் பத்தாயிரம் கொடுத்தால் மட்டுமே என்னால் சான்று வழங்க முடியும் என்று திருப்பி அனுப்பி விட்டார். அவர் மிக மோசமாக பேசியதால் மனம் உடைந்த சீனிவாசன் வேறு வழி இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Tahsildar arrested for taking bribe

திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திருவேல் முருகன் தலைமையில் காவல் ஆய்வாளர் மைதிலி, உதவி ஆய்வாளர். கோபிநாத் மற்றும் தலைமை காவலர்கள் கொண்ட குழுவினர் ஜூன் 14ஆம் தேதி மாலை ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் சென்று அணுகிய போது கொண்டு வந்த லஞ்சப் பணத்தை இரவு காவலர் பாபு என்பவரிடம் கொடுக்க சொல்ல ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விஜிலன்ஸ் டிஎஸ்பி திருவேல் முருகன் மற்றும் காவல் ஆய்வாளர் மைதிலி கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் மஞ்சுளா லஞ்சம் வாங்கச்சொன்னது உண்மை எனத் தெரியவந்து தாசில்தாரும், இரவு காவலரும் கைது செய்யப்பட்டனர்.